டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஶ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் 2-வது சென்னை பன்னாட்டு விமான நிலையம்: மத்திய அமைச்சர் வி.கே.சிங்

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று ராஜ்யசபாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைவதாக மத்திய அரசு அறிவிப்பு

    சென்னை மீனம்பாக்கத்தில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-வது விமான நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கபட்டு வருகின்றன.

    6 பேர் இறந்த அதே இடம்.. ரயில்போல் பின்னிய 15 வாகனங்கள்! செங்கல்பட்டு அருகே சினிமாவை மிஞ்சும் விபத்து6 பேர் இறந்த அதே இடம்.. ரயில்போல் பின்னிய 15 வாகனங்கள்! செங்கல்பட்டு அருகே சினிமாவை மிஞ்சும் விபத்து

     பரந்தூர், பன்னூர்

    பரந்தூர், பன்னூர்

    சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம், திருப்போரூர், மதுராந்தகம், பரந்தூர், திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் என 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த 4 இடங்கள் குறித்து பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. மேலும் விவசாய சாகுபடி பாதிக்காத வகையில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.

     எந்த இடம்?

    எந்த இடம்?

    இந்த ஆய்வுகளின் முடிவில் பரந்தூர் அல்லது பன்னூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. மேலும் பன்னூரில் 4500 ஏக்கர், பரந்தூரில் 4791 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டன. இருப்பினும் பரந்தூர் அல்லது பன்னூர்- இரண்டில் எந்த இடத்தில் விமான நிலையம் அமையும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தமிழகத்தில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

     பரந்தூரில் ஏர்போர்ட்

    பரந்தூரில் ஏர்போர்ட்

    இந்நிலையில் ராஜ்யசபாவில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், சென்னை அருகே பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்தார். இது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையின் தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 59 கி.மீ. தொலைவில் பரந்தூர் அமைந்துள்ளது.

     2-வது ஏர்போர்ட்

    2-வது ஏர்போர்ட்

    ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் ரூ1,500 கோடி மதிப்பீட்டில் 5,000 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் 2-வது சென்னை பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளது. சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது பரந்தூர். ஏற்கனவே கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் சந்தித்து பேசியிருந்தார்.

    English summary
    Union Minister VK Singh said that Chennai’s 2nd airport to come up at Parandur in the Rajyasabha today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X