ராஜஸ்தானில் சத்தீஸ்கர் பார்முலா? சச்சின் பைலட் மீண்டும் துணை முதல்வர் அல்லது மாநில காங்கிரஸ் தலைவர்?
டெல்லி: சத்தீஸ்கரில் கலகக் குரல் எழுப்பி வந்த டிஎஸ் தியோ சிங், துணை முதல்வராக நியமித்து உட்கட்சி மோதலுக்கு முடிவு கட்டியிருக்கிறது காங்கிரஸ். இதே பார்முலாவை ராஜஸ்தானில் செயல்படுத்தி சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி அல்லது மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி தரக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இரண்டரை ஆண்டுகள்தான் முதல்வர் பதவி வழங்குவது என கட்சி மேலிடம் முடிவு செய்தது; எஞ்சிய இரண்டரை ஆண்டுகள் எனக்குதான் முதல்வர் பதவி தர வேண்டும் என மூத்த தலைவர் சிங் தியோ கலகக் குரல் எழுப்பி வந்தார். இதனால் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸில் குழப்பம் நிலவி வந்தது. இதனாலேயே தமது வசம் இருந்த பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இலாகாவை ராஜினாமா செய்தார் தியோ சிங். ஆனால் சுகாதாரம் மற்றும் குடும்பநலம், மருத்துவக் கல்வி, 20 அம்ச திட்ட அமலாக்கம் மற்றும் வணிக வரித் துறை இலாகாவை அவர் ராஜினாமா செய்யாமல் இருந்தார். அத்துடன் முதல்வர் பூபேஷ் பாகலை கடுமையாக விமர்சித்து கடிதமும் அனுப்பி இருந்தார் தியோ சிங். இதனால் டெல்லி மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்தது.
இதனிடையே கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருந்த டிகே சிவகுமார்- சித்தராமையாவை ஒருங்கிணைத்து தேர்தலில் அமோக வெற்றியை அறுவடை செய்தது காங்கிரஸ். இதே பார்முலாவை அடுத்த சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் அமல்படுத்தி உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது காங்கிரஸின் திட்டம்.
இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிரடியாக தியோ சிங்கை துணை முதல்வராக்கி அவரது அதிருப்தி குரலை கட்டுப்படுத்தி இருக்கிறது காங்கிரஸ். இதே பார்முலாவையே ராஜஸ்தானிலும் செயல்படுத்த போகிறதாம் காங்கிரஸ். ராஜஸ்தான் மாநிலமும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் சச்சின் பைலட்டுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்குவது அல்லது மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி கொடுப்பது என்பது காங்கிரஸ் மேலிடத்தின் திட்டமாம். இதனை முதல்வர் கெலாட் எதிர்த்தால் அவரை சமாதானப்படுத்துவது என முடிவு செய்திருக்கிறதாம் காங்கிரஸ் மேலிடம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications