Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இது மறக்க வேண்டிய பட்ஜெட்.." பாயிண்ட் பாயிண்டாக விமர்சித்த ப சிதம்பரம்! மத்திய அரசு மீது தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை "மறக்க வேண்டிய பட்ஜெட்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். பொதுத்துறை, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யவில்லை என்று சாடிய அவர், 2025-26 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவினமும் குறைக்கப்பட்டதாக அவர் சாடினார்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்தார். இதில் மிகப் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. இதற்கிடையே இப்போது மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. 2026-27 பட்ஜெட் குறித்த விவாதத்தை ராஜ்யசபாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

Chidambaram on Union Budget 2026-27 slams as Forgettable Budget Slow growth raise in unemployment

ப சிதம்பரம் தாக்கு

அரசின் "சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" தடம் புரண்டிராவிட்டாலும், சிக்கித் தவிப்பதாகக் குறிப்பிட்டார். இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை பெரும் சவாலாகத் தொடர்வதாகவும், அரசின் "பயிற்சித் திட்டம்" முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததற்காகவும் சிதம்பரம் அரசை விமர்சித்தார். மேலும், கிராமப்புறங்களுக்குச் சாலைகள் மற்றும் வீடுகள் மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இந்த பட்ஜெட் கிராமப்புற வளர்ச்சியில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

மறக்கக்கூடிய பட்ஜெட்

இது தொடர்பாக அவர் மேலும், "இது ஒரு மறக்க வேண்டிய பட்ஜெட். கடந்த ஆண்டு இதே அவையில் நிதியமைச்சர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தயாரித்துள்ளார். இது ஒரு மறக்கக்கூடிய பட்ஜெட். இந்த பட்ஜெட், நாட்டின் தற்போதைய அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக, GFCF எனப்படும் மொத்த நிலையான மூலதன உருவாக்கமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதமாகவே தேக்கமடைந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் நிகர நேரடி வெளிநாட்டு முதலீடு 0.09 சதவீதத்திற்கும் குறைவாகச் சரிந்துவிட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாகத் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர். நிறுவனங்கள் செல்வத்தைச் சேர்த்தாலும் கூட இருந்தாலும், தனியார் முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22 சதவீதமாகவே பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது.

பாதியாகக் குறைப்பு

பொதுத்துறை, தனியார் துறை அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யாரும் இந்தியாவில் முதலீடு செய்யவில்லை. இந்தச் சூழலில் அரசும் மூலதனச் செலவினங்களைக் குறைத்துள்ளது. 2025-26 நிதியாண்டில் அவர்கள் ₹1,44,376 கோடியை மூலதனச் செலவினத்தில் குறைத்துள்ளனர். இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், மாநிலங்களுக்கான மூலதனச் செலவின ஒதுக்கீடு ₹1,19,041 கோடி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 15 சதவீதமாக உள்ளது. மொத்தப் பணியாளர்களில் 25 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மட்டுமே வழக்கமான வேலைக்குச் சென்றுள்ளனர். 4, 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது சுயதொழில், விவசாயத் துறைகளில் அதிகத் தொழிலாளர்கள் உள்ளனர். மற்ற துறைகளில் போதிய வளர்ச்சி இல்லை என்பதையே இது காட்டுகிறது. இது பொருளாதாரத்தின் ஆரோக்கியமின்மையைக் காட்டுகிறது.

வேலையின்மை

144 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், இரண்டு கோடிக்கும் குறைவானவர்கள் மட்டுமே தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். மொத்த ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு பல ஆண்டுகளாக 16 சதவீதமாகவே முடங்கியுள்ளது. மெதுவான வளர்ச்சி விகிதம் தான் இங்கு இருக்கிறது. மத்திய அரசு சொன்ன "சீர்திருத்த விரைவுவண்டிகள்" தடம் புரளவில்லை என்றாலும் அது சிக்கித் தவிக்கிறது. வேகத்தை இழந்துவிட்டது.

2023-24இல் 12 சதவீதமாக இருந்த நாமினல் வளர்ச்சி விகிதம், 2024-25இல் 9.8 சதவீதமாகவும், 2025-26 இல் 8 சதவீதமாகவும் குறைந்துவிட்டது. சீர்திருத்த எக்ஸ்பிரஸ் மெதுவாகிவிட்டது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+