Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுடன் கருத்து மாறுபாடு கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தை முடித்து திரும்பிய அவர், மேற்குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள் தொடர்பாக பிரதமரை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேதி கேட்கப்பட்டது. பிரதமர் கடந்த 24ம் தேதி அமெரிக்காவிலிருந்து வந்த நிலையில், இன்று முதல்வரை சந்திக்க தேதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

m k stalin narendra modi tamilnadu

இதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர், இரவு டெல்லி சென்றடைந்தார். அங்கு, எம்.பிக்கள் டி.ஆர் பாலு, கனிமொழி, கலாநிதிமாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பை அளித்திருந்தனர். நேற்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர், இன்று காலை 11 மணியளவில் பிரதமரை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், சமக்ரா சிக்ஷா கல்வி நிதி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி என இரண்டு விஷயங்கள் முக்கியமாக பேசப்பட்டிருக்கிறது. தவிர, நீட், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. மேலும் மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க கூடாது, வெள்ள பாதிப்புக்கான போதுமான நிதி, தமிழ்நாடு மீனவர்கள் கைதுக்கு உரிய தீர்வு உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வர் கொடுத்திருக்கிறார்.

பிரதமர் உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், "சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்காததால் பணிகளில் தொய்வு; உடனடியாக ஒன்றிய அரசு நிதியை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு 60%, மாநில அரசு 40% நிதியை அளித்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தொகை ரூ.2,152 கோடி. இதில் முதல் தவணையை வழங்கவில்லை.

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு விதிமுறையான மும்மொழி கொள்கையை பின்பற்ற தமிழ்நாடு அரசு ஒத்துக்கொள்ளவில்லை. • இதில் கையெழுத்திடாததை காரணம் காட்டி ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறியுள்ளேன். 191 மீன்பிடி படகுகளையும் 141 மீனவர்களையும் விடுவிக்க இலங்கையின் புதிய அதிபரிடம் ஒன்றிய அரசு வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியதாக கூறியுள்ளார். மேலும் இந்த மகிழ்ச்சியான சந்திப்பை, பயனுள்ள சந்திப்பாக மாற்றுவதென்பது பிரதமரின் கைகளில்தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மோடியை சந்தித்தவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் நேரில் சந்தித்தார். இதனையடுத்து மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+