12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வேக்சின்.. இணைநோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை: ஆலோசனைக் குழு
டெல்லி: 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வேக்சின் அளிப்பதில் இணைநோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசின் தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை தாக்குதல் இன்னும் சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் மூன்றாம் அலை தாக்கலாம், முக்கியமாக குழந்தைகள் பலர் மூன்றாம் அலை காரணமாக பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் குழந்தைகளுக்கு வேக்சின் அளிப்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஏற்கனவே சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் மூன்று டோஸ் கொரோனா வேக்சினுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசர அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் சைடஸ் கேடில்லா வேக்சினை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
ZyCoV-D என்று அழைக்கப்படும் இந்த வேக்சின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேக்சின் கொடுக்கும் போது இணைநோய் (comorbidities) உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசின் தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்கே அரோரா தெரிவித்துள்ளார்.
இணைநோய் (comorbidities) உள்ளவர்களுக்கு என்று தனியாக வேக்சின் எடுத்து வைக்கப்படும், அவர்களுக்கு முதலில் வேக்சின் கொடுக்கவும், எளிதாக வேக்சின் கிடைக்கவும் வகை செய்யப்படும், அதன்பின் மற்ற குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு கொசக்சினை கொடுப்பது தொடர்பான அனுமதி செப்டம்பர் இறுதியில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது குழந்தைகளுக்கான வேக்சின் கையிருப்பு உயரும். செப்டம்பர் மாதம் மட்டும் 10 கோடி கோவாக்சின் உற்பத்தி செய்யப்படும், என்று மத்திய அரசின் தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே குழந்தைகளுக்கான வேக்சினான சைடஸ் கேடில்லா வேக்சினை அதிக அளவில் உற்பத்தி செய்வோம், 5 கோடி டோஸ்களை இந்த வருட இறுதிக்குள் உருவாக்குவோம் என்று கேடில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வேக்சின் கையிருப்பு வரும் நாட்களில் இந்தியாவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications