மனஅழுத்தத்தை சந்திக்கும் கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகள்.. எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்
டெல்லி: கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வித மன அழுத்தத்துடனே இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார். மேலும் ஒரே நேரத்தில் கூட்டத்தை பார்த்தாலும் அழுகிறார்கள், சாலைகளில் கேட்கும் அதிக சப்தங்களையும் கேட்டு அஞ்சுகிறார்கள் என பெற்றோர் தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா முதல் அலை வீசிய போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்றியதால் நிறைய பேர் கர்ப்பம் தரித்தார்கள். மேலும் ஆணுறைகள் அதிகம் விற்பனையானதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கொரோனாவால் பெரியவர்கள் ஒரு வித மன அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில் அந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு விதமான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அழும் குழந்தை
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த குழந்தை தற்போது ஒரு வயதான போதிலும் வீட்டு கேட் முன்பு யாராவது நின்றால் அவர்களை கண்டு அஞ்சி அழுவதாக அவரது தாய் தெரிவிக்கிறார். அது போல் சாலைகளில் ஏற்படும் அதிக சப்தத்தை கேட்டும் குழந்தை பயப்படுவதாகவும் கூறுகிறார்.

தடுப்பூச
இதற்கு காரணம் கொரோனா அச்சுறுத்தலால் குழந்தை பிறந்தவுடன் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் குழந்தையை பார்க்க அனுமதித்தது, வெளியே எங்கும் அழைத்து செல்லாமல் அக்குழந்தையின் டிரிப்பே மருத்துவமனைக்கு தடுப்பூசி போடுவதற்கு என்று இருந்தது.

ஓராண்டு
இதனால் குழந்தை பிறந்து ஓராண்டு ஆன போதிலும் அக்குழந்தை சமூகத்தை கண்டு அஞ்சுகிறது. வயிற்றில் இருந்த போதும் பிறந்த போதும் ஊரடங்கால் எந்த வித சப்தமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகளால் சாலைகளில் ஏற்படும் சப்தத்தையும் அவர்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.

பயணம்
வெளியுலகத்தை விட வீட்டை சுற்றியே அவர்களது பயணம் தொடர்ந்து வருகிறது. மேலும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் 10 அல்லது 20 பேரைதான் அழைக்கிறோம். அவர்களும் ஏற்கெனவே அந்த குழந்தைக்கு அறிமுகமான குடும்ப உறுப்பினர்கள்தான். இதனால் வீட்டு கேட்டில் யாராவது நின்றிருந்தாலும் அக்குழந்தை அழுகிறது.

பெற்றோர் புகார்
இதுகுறித்து உளவியல் நிபுணர்கள் கூறுகையில் பெரும்பாலான பெற்றோர் கூறும் புகார்களே இவைதான். இன்று ஒரு குழந்தை கேட்டில் நிற்கும் புதியவர்களை பார்த்து அழுகிறது என்றால் நாளை அதன் பெற்றோர் வொர்க் பிரம் ஹோம் முடிந்து அலுவலகம் செல்ல நேரிட்டால் என்ன நடக்கும் என யோசிக்க வேண்டும்.

வெளியுலகம்
முதலில் குழந்தைகளை வெளியுலகிற்கு அழைத்து வர வேண்டும். முதற்கட்டமாக அதன் வயதுடைய பக்கத்துவிட்டு குழந்தையுடன் இந்த குழந்தையை விளையாட வைப்பது. பின்னர் காலை, மாலை நேரங்களில் அந்த குழந்தையை கூட்டம் குறைவான உள்ள இடங்களுக்கு அழைத்து செல்வது உள்ளிட்டவற்றை செய்தால்தான் அவர்கள் வெளியுலகிற்கு வருவார்கள் என்கிறார்கள்.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications