"நோட் பண்ணிக்கோங்க".. சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை சுற்றி வளைத்து தாக்கும்..ராகுல் காந்தி ஆருடம்
டெல்லி: "நான் சொல்வதை குறித்துக் கொள்ளுங்கள்.. போர் என்று ஒன்று வந்தால் சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தும்" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு இது ஒரு சர்ப்ரைஸ் அட்டாக்காக இருக்கும் என்று கூறியுள்ள ராகுல்காந்தி நமது பொது எதிரிகளான சீனாவையும், பாகிஸ்தானையும் ஒற்றுமையாக இருக்க விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரை டெல்லி வந்ததை அடுத்து, முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்.
ஏற்கனவே இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, தற்போது இதுபோன்ற கருத்தை கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு மீது கடும் விமர்சனம்
அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங்க் செக்டாக் பகுதிக்குள் கடந்த 9-ம் தேதி சீனப் படையினர் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, அவர்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இதன் தொடர்ச்சியாக, அருணாச்சலை ஒட்டியுள்ள தங்கள் எல்லையில் 50,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் அங்கு படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனால் வடகிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். "இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், மத்திய அரசோ தூங்கிக் கொண்டிருக்கிறது" என ராகுல் அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அஞ்சி நடுங்குகிறது அரசு
இதேபோல், அருணாச்சல் - இந்தியா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கருத்து தெரிவித்திருந்தார். "அருணாச்சல், லடாக் என இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் சீனா தொடர்ந்து நுழைந்து வருகிறது. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. ஆனால், சீனாவை மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக கண்டிக்கவில்லை. அதுமட்டுமின்றி, சீன விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச கூட மத்திய அரசு அஞ்சி நடுங்குகிறது" என சோனியா காந்தி பேசியிருந்தார்.

சீனா, பாகிஸ்தான் பொது எதிரி- ராகுல்
இந்நிலையில், தனது பாரத் ஜோடோ நடைப்பயணம் நேற்று டெல்லிக்கு வந்ததை அடுத்து, அங்குள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர், "இந்தியாவுக்கு சீனாவும், பாகிஸ்தானும் பொது எதிரிகளாக உருவெடுத்துள்ளன. அவர்கள் தனித்தனி நாடுகள் என்றாலும், இந்தியா அதை ஒரே நாடு என்ற பார்வையில் தான் பார்க்க வேண்டும். ஏனெனில், ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அந்நாடுகள் இடையே நெருக்கமான உறவு இருக்கிறது.

'சர்ப்ரைஸ் அட்டாக்'
இனி போர் என ஒன்று வந்தால், இந்தியாவை மேற்கில் இருந்து பாகிஸ்தானும், கிழக்கில் இருந்து சீனாவும் சுற்றிவளைத்து தாக்கும். இந்தியாவுக்கு இது ஒரு சர்ப்ரைஸ் அட்டாக்காக இருக்கும். நமது பொது எதிரிகளான சீனாவையும், பாகிஸ்தானையும் ஒற்றுமையாக இருக்க விடக்கூடாது. இதுவே இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையாக இருக்க வேண்டும். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, இந்த யுத்தியைதான் கையாண்டார். ஆனால், இன்றைய மத்திய அரசோ இது எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications