தென்னை மரத்துல ஒரு குத்து, ஏணிக்கு ஒரு குத்து! மாலத்தீவு அதிபரின் வாழ்த்து செய்தி! இதை கவனிச்சீங்களா
டெல்லி: தொடர்ந்து சீனாவின் பேச்சை கேட்டுக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஜு. இந்நிலையில் குடியரசு தினத்திற்கு அவர் இந்தியாவுக்கு சொல்லியுள்ள வாழ்த்து செய்தி பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
புவிசார் அரசியலில் மாலத்தீவு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. மாலத்தீவு உடனான உறவை பலப்படுத்த, ஏராளமான அளவில் இந்தியா அங்கு முதலீடு செய்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் மாலத்தீவில் அதிகரித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் முகமது முய்ஜு வெற்றி பெற்றார். இந்த வெற்றி இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இதன் பின்னணியில் சர்வதேச அரசியல் இருக்கிறது. அதாவது, தற்போது சீனா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருக்கிறது. எனவே சீனாவுடன் கைகோர்த்தால் தாங்களும் வளரலாம் என சில நாடுகள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த வரிசையில் மாலத்தீவும் இருக்கிறது. எனவே சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதனை சீனா வரவேற்றிருக்கிறது. ஏனெனில் தெற்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை தக்க வைக்க இதுபோன்ற நட்பு நாடுகள் அவசியமாகும்.
இப்படி இருநாடுகளும் கைகோர்த்ததன் விளைவாக, மாலத்தீவு இந்தியாவுக்கு எதிராக திரும்பியுள்ளது. அரசி, சர்க்கரை தொடங்கி ஜவுளி பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் என அனைத்தும் இந்தியாவிலிருந்துதான் மாலத்தீவுக்கு ஏற்றுமதியாகிறது. இப்படி இருந்தும் கூட, தங்கள் நாட்டிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்கிற உத்தரவை மாலத்தீவு அதிபர் முகமது முய்ஜு பிறப்பித்திருக்கிறார். இது இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான அதிபர் முகமது முய்ஜுவின் முடிவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில், இந்தியாவின் 75வது குடியரசு தினத்திற்கு முகமது முய்ஜு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனித்தனியே வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.
அதில், "முய்ஸு, மாலத்தீவு அரசாங்கம் மற்றும் மாலத்தீவு மக்கள் சார்பாக குடியரசு தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பல நூற்றாண்டுகளாக நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் ஆழ்ந்த உறவின் உணர்வு ஆகியவற்றால் வளர்க்கப்பட்ட மாலத்தீவு-இந்தியா பிணைப்பை இந்த தருணத்தில் அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறோம். இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய அரசுக்கும், மக்களுக்கும் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவை தொடர வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
என்னதான் சீனாவுடன் மாலத்தீவு நெருக்கம் காட்டி வந்தாலும், இந்தியாவுடனான உறவை அவ்வளவு எளிதில் மாலத்தீவால் துண்டித்துவிட முடியாது. மட்டுமல்லாது பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவை பகைத்துக்கொண்டால் வேலை ஆகாது. எனவே தான் தென்னை மரத்தில் ஒரு குத்து, ஏணி சின்னத்தில் ஒரு குத்து என்கிற பாணியில், குடியரசு தினத்திற்கு முகமது முய்ஜு இந்தியாவுக்கு குடியரசு தின வாழத்துகளை தெரிவித்திருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications