கால்வன் பள்ளத்தாக்கு முழுவதையும் உரிமை கோரி மீண்டும் சீண்டுகிறது சீனா - நள்ளிரவில் அறிக்கை!
டெல்லி: லடாக் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று சீனா மீண்டும் உரிமை கோரியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
கால்வன் (கல்வான், கல்வன்) பள்ளத்தாக்குப் பகுதி இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கிறது. ஆனால் இப்பகுதிக்கு சீனா திடீரென உரிமை கோரியது.

இதனால் எழுந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 43 சீனாவின் வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனாவின் தாக்குதல், ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்து கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல டெல்லியில் உள்ள சீனா தூதரகம், சீனா வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை நள்ளிரவில் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், ஜூன் 6-ந் தேதி இந்திய ராணுவ வீரர்களே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டி சீனா வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 15-ந் தேதியும் இந்திய ராணுவ வீரர்களே அத்துமீறி தங்கள் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால்தான் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன என அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அறிக்கையில் ஒட்டுமொத்த கால்வன் பள்ளத்தாக்கு பகுதியும் சீனாவுக்கே உரிமை என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த பகுதியில் சீனா ராணுவத்தினர் பல ஆண்டுகாலமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications