உக்ரைன் போருக்கு இடையே திடீரென இந்தியா வரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்! முக்கிய மீட்டிங்! பின்னணி
டெல்லி: லடாக் எல்லையில் நடந்த மோதலுக்கு பின் முதல் முறையாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த மாத இறுதியில் இந்தியா வர வாய்ப்புள்ளது. அப்போது இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவிடம், சீனா அடிக்கடி எல்லையில் வாலாட்டுகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தாலும் சீனா தனது நடவடிக்கையை மாற்றி கொள்வது இல்லை.
இதனால் இருநாடுகளின் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா-சீன எல்லையில் அவ்வப்போது பதற்றமும் நிலவி வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவங்களும் எல்லையில் எப்போதும் உஷராகவே உள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்
2020 மே 5ல் இந்தியா- சீனா இடையே பாங்காங் ஏரி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதேபோல் 2020 ஜூன் மாதம் 15ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மொத்தம் 42 சீன வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.

அமெரிக்கா மீது குற்றச்சாட்டு
இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில் தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த மாத துவக்கத்தில், ‛‛எல்லை தொடர்பான பிரச்சனைகளால் இந்தியா-சீனா உறவில் பிரச்சனை உள்ளது. இதுகுறித்து நியாயமான முறையில் பேசி தீர்க்க வேண்டும். சில சக்திகள் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றன‛‛ எனக்கூறியிருந்தார். இதன்மூலம் அமெரிக்காவை அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தியா வரும் சீன அமைச்சர்
இதற்கிடையே லடாக் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா, சீனா இடையே ராணுவ அதிகாரிகள் சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை நீண்டு வருகிறது. இந்நிலையில் தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நேபாளம் செல்ல உள்ளார். அந்த பயணத்தை முடித்து அவர் இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரச்சனை குறித்து பேச...
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்தியா வரும் பட்சத்தில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை குறித்து பேச வாய்ப்புள்ளது. மேலும் எல்லையில் தொடர்ந்து அமைதி நிலவ இந்தியா-சீனா இடையே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. லடாக் மோதலுக்கு பிறகு முதல் முறையாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயின் இந்திய வருகை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

உறவை தீர்மானிக்குமா
முன்னதாக இந்தியா-சீனா உறவு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், சீனா ஒப்பந்தங்களை மீறி எல்லை பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு பின்னடைவை சந்தித்துள்ளது. எல்லை பிரச்சனைக்கான தீர்வே இருநாட்டின் உறவை தீர்மானிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் ஒரு சிறு பகுதியையும் சீனாவுக்கு விட்டு கொடுக்கமாட்டோம்'' என பல நிலைகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications