சதிகார சீனா.. ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு எப்படி உதவியது தெரியுமா? ராணுவ அதிகாரி ஷாக் தகவல்
டெல்லி: ‛ஆபரேஷன் சிந்தூர்'நடவடிக்கையின்போது எல்லையில் இந்தியா ஒரே நேரத்தில் 3 எதிரிகளை சமாளித்தது. பாகிஸ்தானை நம் நாட்டின் தாக்குதலில் இருந்து சீனா உதவியது தொடர்பான பரபரப்பான தகவல்களை ராணுவத்தின் திறன் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பிரிவின் துணை தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. கடந்த மே 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் ஏவுகணைகள் மூலம் நம் நாடு பாகிஸ்தானை குறிவைத்து தாக்கியது.

இதில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதேபோல் ராணுவ தளம், விமான தளங்கள் என்று முக்கிய 12 இடங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்கின.
துருக்கி தனது ட்ரோன் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்நிலையில் தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது சீனா எப்படி பாகிஸ்தானுக்கு உதவியது என்பது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.டெல்லியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நம் நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
இவர் நம் நாட்டின் ராணுவத்தின் திறன் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பிரிவின் துணை தலைவராக லெப்டினன்ட் ஜெனரலாக உள்ளார். ராகுல் சிங் ‛ஆபரேஷன் சிந்தூர்'நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு எப்படி சீனா, துருக்கி உதவியது? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது எல்லையில் ஒரே நேரத்தில் 3 எதிரிகளை நம் நாடு சமாளித்தது. துருக்கியும், சீனாவும், பாகிஸ்தானுக்கு உதவியது. சீனா சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. துருக்கியும் ஆதரவை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தது. உங்களின் தாக்குதல்களுக்கான வெக்டார்களை (தாக்குதலுக்கான வழிப்பாதை) அறிந்து வைத்துள்ளதாக தெரிவித்தது. இந்த வெக்டார்களை சீனா தான் கண்காணித்துள்ளது. இதுதொடர்பாக சீனா தனது லைவ் அப்டேட்டுகளை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications