அருணாச்சல் அருகே 3 கிராமங்களை கட்டமைத்துள்ள சீனா... அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு..!
டெல்லி: அருணாச்சல பிரதேசம் அருகே சீனா 3 புதிய கிராமங்களை கட்டமைத்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியா-சீனா-பூட்டான் எல்லையில் புதிதாக முளைத்துள்ள 3 கிராமங்களின் படங்களை என்.டி.டி.வி. தனது பிரத்யேக ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
மூன்று நாடுகளின் முக்கோண எல்லைப்பகுதியில் சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆந்திராவில் மர்ம நோய்.. 228 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல்.. காரணம் என்ன?

எல்லை பிரச்சனை
இந்தியா-சீனா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சனைக்கு மத்தியில் சீனா தந்திரமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்கு அருணாச்சல பிரதேசத்தின் பும்லா பாஸ் பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் 3 கிராமங்களை சீனா உருவாக்கியிருப்பதாக என்.டி.டி.வி. அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளது.

பறவை வடிவில்
மேலும், கடந்த காலங்களில் பறவை வடிவில் சேட்டிலைட் மூலம் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கும் இப்போது அங்கு எடுக்கப்பட்டுள்ள படத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் இந்த நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய எல்லை
இதனிடையே அருணாச்சல பிரதேசம் அருகே உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத் வரை ரயில் பாதை அமைக்கும் பணியில் சீனா ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது புதிதாக கிராமங்களையும் உருவாக்கி அவைகளை இணைக்கும் சாலைகளும் அமைக்கப்பட்டிருப்பதாக என்.டி.டி.வி. தெரிவித்துள்ளது.

நீர் வசதி
மேற்கு அருணாச்சல் எல்லையை ஒட்டி சீனா உருவாக்கியுள்ள 3 புதிய கிராமங்களிலும் இணைய வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லைப் பிரச்சனை விவகாரத்தில் சீனா தொடர்ந்து தந்திரமாக செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.