மூச்சு கூட விடமுடியவில்லை.. அசர வைத்த இந்திய வீரர்களின் திறமை.. சீனாவை கலங்கடித்த 5 நிமிட வீடியோ!
டெல்லி: இந்தியா சீனா எல்லையில் இரண்டு நாட்டு வீரர்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன் வெளியான இந்த வீடியோவின் முழுமையான பின்னணி என்ன, அதில் என்ன நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியா - சீனா இடையிலான பிரச்சனை எப்போது முடிவிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையிலான தீவிரமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால பேச்சுவார்த்தைக்கு இடையே கல்வான் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது .
அதேபோல் இன்னும் லடாக் அருகே இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா இன்னும் படைகளை திரும்ப பெறவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சீனா இந்தியா கூட மோத வாய்ப்பே இல்ல போலருக்கே ராஜா! இந்த டேட்டாவ பாருங்க!
|
எங்கே நடந்தது
இந்த நிலையில்தான் இந்தியா சீனா எல்லையில் இரண்டு நாட்டு வீரர்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. மொத்தம் 5 நிமிட வீடியோ ஆகும் இது. இந்த வீடியோ லடாக் எல்லையில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த லடாக் எல்லையில் நடந்த சம்பவம் கிடையாது. சிக்கிம் எல்லையில் எல்லையில் மலை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உயரமான மலை
வடக்கு சிக்கிம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறுகிறார்கள். இந்தியா மற்றும் சீனாவின் திபெத் இடையே இருக்கும் Chomo Yummo மலை பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. இந்த மலை 22000 அடி உயரம் கொண்டது ஆகும். இங்கு எப்போதும் பதற்றம் நிலவுவது வழக்கம். இதன் ஒரு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவிற்குள் உள்ளே நுழைய முயன்று இருக்கிறார்கள்.
|
சீன வீரர்கள்
மொத்தம் சீனாவை சேர்ந்த 10 -20 வீரர்கள் இங்கே எல்லை மீறி உள்ளே செல்ல முயன்று இருக்கிறார்கள். அப்போது சீனாவின் ராணுவ வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து இருக்கிறார்கள். முதலில் இந்திய வீரர்கள் அவர்களிடம் பேசி பார்த்தனர். அதன்பின் அவர்கள் கேட்கவில்லை என்றதும், இந்திய வீரர்கள் சீன வீரர்களை கைகளால் தாக்கி திருப்பி அனுப்பினார்கள்.

எத்தணை உயரம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த சண்டை 5500 அடி உயரத்திற்கும் அதிகமான பகுதியில் நடந்துள்ளது. இதில் இந்திய வீரர்கள் எந்த பதற்றமும் இன்றி சண்டை போட்டுள்ளனர். தரையில் எப்படி சாதாரணமாக சண்டை போடுவார்களா அப்படி சண்டை போட்டு இருக்கிறார்கள். மிகவும் திடமாக,உறுதியாக அவர்கள் மலை மீது நின்றது வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் சீன வீரர்கள் அப்படி இல்லை. அந்த உயரத்தில் அவர்கள் நிலைகுலைந்து விட்டனர் .

மிக கஷ்டம்
எப்படி நிற்பது என்று கூட தெரியாமல் அவர்கள் கஷ்டப்பட்டது வீடியோவில் பதிவாகி உள்ளது. அதோடு அவர்கள் வீடியோவில் மூச்சு விட அதிகம் சிரமப்பட்டார்கள். 5500 அடி உயரத்தில் மூச்சு விட்டுக்கொண்டே சண்டை போட முடியாமல் அவர்கள் கடுமையாக திணறினார்கள். சீனா வீரர்கள் இப்படி கஷ்டப்பட்டது அப்படியே வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்திய வீரர்களின் இந்த திறமையை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

இதுதான் திறமை
இவ்வளவு உயரத்தில் கூட இந்திய வீரர்கள் உறுதியாக சண்டை போடுவதை இணையத்தில் பலரும் பாராட்டி உள்ளனர். இந்தியா எல்லையில் லடாக் அருகே தற்போது இந்தியா தனது ஸ்பெஷல் மலை பாதுகாப்ப்பு படை எனப்படும் "Special Mountain Force" படையை களமிறக்கி உள்ளது. அதன்படி லடாக் அருகே இருக்கும் மலை பகுதிகளில் இந்தியா இந்த படைகளை களமிறக்கி உள்ளது. உலகிலேயே இந்தியாவிடம்தான் சிறப்பான Mountain Force உள்ளதை இது உறுதி படுத்துகிறது.












Click it and Unblock the Notifications