டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள்.. நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் நமது நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளது சீனா. தனது நாட்டு நிறுவனங்கள், இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. America முதல் china வரை.. India-க்கு உதவும் உலக நாடுகள்

    இதுதொடர்பாக சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் ஜியோஜியான் கூறுகையில், இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு நாங்கள் எங்களது நாட்டு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். குறிப்பாக மருத்துவப் பொருட்கள் சப்ளையில் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை சீன நிறுவனங்கள் வழங்கும் என்றார்.

    Chinese companies to help India in its 2nd wave fight

    இதற்கிடையே, சீனாவின் சியான் நகரிலிருந்து டெல்லிக்கு இடையிலான தனது சரக்குப் போக்குவரத்தை சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனம் 15 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்தியாவுக்குத் தேவையான ஆக்சிஜன் கம்ப்ரஸர்களை சீனாவிலிருந்து கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் மழுப்பலாக பதில் அளித்துள்ளது.

    கொரோனா.. மே மத்தியில் கோவிட் கேஸ்கள் 48 லட்சமாக உயரும் அபாயம்.. ஐஐடி கொரோனா.. மே மத்தியில் கோவிட் கேஸ்கள் 48 லட்சமாக உயரும் அபாயம்.. ஐஐடி

    இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. நிலையை சீன அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எங்களது உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம். தற்போது இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன. இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் நாங்கள் மும்முரமாக உள்ளோம். குறிப்பிட்ட விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம்தான் இதுகுறித்து கேட்க வேண்டும் என்றார் வாங் வென்பின்.

    English summary
    Chinaese Govt has said that it has asked its companies to help India in its fight againt Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X