“இமாலய சாமியார்” என “ இமாலய பொய்”.. சித்ரா ராமகிருஷ்ணாவை கொத்தாக தூக்கிய சிபிஐ.. அடுத்த அதிரடி என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி நீதிமன்றம் சனிக்கிழமை முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

என்எஸ்இ நிர்வாக இயக்குநர்-தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார்.

தனது பதவி காலத்தின் பல்வேறு முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணா ஈடுபட்டதாக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புகார் தெரிவித்தது.

என்எஸ்இ செயல் அதிகாரி

என்எஸ்இ செயல் அதிகாரி

மேலும், என்எஸ்இ-யின் குழு செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநரின் உதவியாளராகவும் ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் உரிய வழிமுறைகள் இன்றி நியமிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இமயமலையில் உள்ள மர்ம யோகி ஒருவரின் வழிகாட்டுதலின்படியே ஆனந்த் சுப்ரமணியனை அப்பதவிக்கு நியமித்ததாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்தார். இந்த விவகாரங்கள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

ஆனந்த் சுப்ரமணியன் கைது

ஆனந்த் சுப்ரமணியன் கைது


தனியார் நிறுவனத்துக்கு தேசிய பங்குச் சந்தையின் முக்கியத் தகவல்களைக் கசியவிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இதே வழக்கில் முன்ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் சனிக்கிழமை விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வழக்கின் விசாரணை தற்போதுதான் தொடங்கியுள்ளது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

விசாரணையை சிபிஐ மிகவும் மெதுவாக மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் 4 மேற்கொள்ளப்படவில்லை. அவர்களை செபி கனிவாக கவனித்துக் கொண்டது. பொருளாதாரம் சார்ந்த குற்றச்சாட்டுகளில் சூழ்ச்சி அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் மக்களின் வரிப் அதிக அளவில் வீணாகியிருக்க பணம் வாய்ப்பிருப்பதால், அதன் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த வழக்கு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

சித்ரா கைது

சித்ரா கைது


என்எஸ்இ-யின் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளதால், வழக்கு தொடர்பான சாட்சியங்களை மனுதாரர் அழிப்பதற்கு முயற்சிக்கக் கூடும். இந்த வழக்கில் சிபிஐ விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஒட்டுமொத்த சூழலையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் மறுக்கப்படுகிறது. மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றார். இந்நிலையில், முன் ஜாமீன் தள்ளுபடியானதைத் தொடர்ந்து தில்லியில் ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+