லவ்வுன்னா லவ்வு.. அப்படி ஒரு லவ்.. ஆனால் இப்ப கம்பி எண்ண வச்சிருச்சு பாருங்க!
காதல் விவகாரத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
டெல்லி: லவ்வுன்னா லவ்.. அப்படி ஒரு லவ்.. கல்யாணம் ஆன பெண் அதிகாரி மீது இன்னொரு அதிகாரிக்கு வெறி பிடிச்ச காதல்.. கடைசியில் அந்த பெண்ணின் கணவரையே பழிவாங்க துணிந்துவிட்ட அந்த அதிகாரி இப்போது கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்.
சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு படையில் வேலை பார்ப்பவர் ரஞ்சன் பிரதாப் சிங். சீனியர் கமாண்டென்ட். இவருக்கு வயது 45. பெரிய பதவி, பொறுப்புள்ள பதவி என்றாலும் இவருக்குள்ளும் ஒரு லவ் இருந்திருக்கிறது.
20 வருஷத்துக்கு முன்னாடி, சிவில் சர்வீஸ் தேர்வின்போது, ஒரு பெண்ணை பார்த்துள்ளார். அந்தப் பெண்ணும், உத்தரகாண்ட்டிலுள்ள ஐஏஸ் பயிற்சி அகடாமியில் 4 மாதம் டிரெயினிங் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த 4 மாசத்தில்தான் ரஞ்சனுக்கு லவ் வந்துவிட்டது. அதுவும் ஒரு தலை காதல். அதை அந்த பெண்ணிடம் சொல்லவும் இல்லை.

கல்யாணம்
பிறகு டிரெயினிங் முடித்துவிட்டு, அந்தப் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்துவிட்டார். வீட்டில் அவருக்கு ஒரு கல்யாணத்தையும் செய்து வைத்தனர். காதலிக்கு கல்யாணம் ஆன விஷயம், ரஞ்சனுக்கு லேட்டாகத்தான் தெரிந்திருக்கிறது. விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்தே அவர் அப்செட்! இருந்தாலும் காதலியை விட மனசு இல்லை என்பதால், அடிக்கடி நட்பாக பேசி வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணோ, இவரிடம் பேசுவதை சில காலமாக தவிர்த்து வந்துள்ளார்.

போதை பொருள்
ஏற்கனவே நொந்து போயிருந்த ரஞ்சனுக்கு இது இன்னும் ஆத்திரத்தை தந்தது. அதனால், அந்த பெண்ணை பழிவாங்க பிளான் போட்டார். அதன்படி பெண்ணின் கணவரது காரில் 550 கிராம் அளவு போதைபொருளை ஒளித்துவைத்தார். இதை பற்றி சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் தகவலும் அளித்தார். விரைந்து வந்த அதிகாரிகளும் அந்த காரை சோதனை செய்தபோது, போதைபொருள் இருந்ததையும் பார்த்தனர். ஆனாலும், சிஐஎஸ்எஃப் பிரிவு போலீசுக்கு சந்தேகம் எழுந்தது.

சந்தேகம்
போதை பொருளை எப்படி தன் காருக்குள்ளேயே பதுக்கி வைக்க முடியும்? அதுவும் 3 இடங்களில் ஒரே காருக்குள் எப்படி ஒளித்து வைக்க முடியும்? ஒளித்து வைப்பது எப்படி போலீசுக்கு சொல்லாமல், எதற்காக சிஐஎஸ்எஃப் அதிகாரிகளுக்கு தகவல் வரவேண்டும் என்றெல்லாம் யோசித்தனர். இதன்பிறகுதான் இந்த விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போதுதான், தனது நெருங்கிய நண்பன் சரஸ் என்பவர் உதவியுடன் இந்த காரியத்தை செய்தது தங்களது சிஐஎஸ்.எஃப் சீனியர் கமாண்டென்ட் ரஞ்சன் பிரதாப் என்பது தெரியவந்தது.

கைது
இதன்பிறகு ரஞ்சனிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டர். அவர் உட்பட 2 போதை பொருளை வாங்க உதவிய அவரது நண்பரையும் இப்போது போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இது எல்லாவற்றிற்கும் மேலான ஒரு ஷாக் செய்தி என்னவென்றால், கைதான ரஞ்சன் பிரதாப் சிங் இப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக்கத்தில் பாதுகாப்பிற்கான இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பதே! எல்லாம் லவ் படுத்தும் பாடு!
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications