அடுத்து 3ஆம் அலை? டெல்டாவை விட 10 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. இந்திய மருத்துவ சங்கம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மோசமான 3ஆம் அலை ஏற்படும் என எச்சரித்துள்ள இந்திய மருத்துவ சங்கம், முன்களப் பணியாளர்களுக்கு 3ஆம் டோஸ் போடுவது குறித்தும் சிறார்களுக்கு வேக்சின் அனுமதி குறித்தும் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

ஓமிக்ரான் உருமாறிய கொரோனா - கடந்த சில வாரங்களாகவே உலகெங்கும் இதுதான் முக்கிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இது உலகின் பல நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது,

ஓமிக்ரான் கொரோனா

ஓமிக்ரான் கொரோனா

ஓமிக்ரான் மிக வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் எனச் சர்வதேச ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியாவிலும் கூட வரும் காலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலில் சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ்களை செலுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

3ஆம் அலை

3ஆம் அலை

இது தொடர்பாகக் கூறுகையில், "இந்த உருமாறிய கொரோனா இந்தியாவின் பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். தற்போதுள்ள தரவுகள் மற்றும் கடந்த கால அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது ஓமிக்ரான் வேகமாகப் பரவி, அதிக மக்களைப் பாதிக்கும் எனத் தெரிகிறது. இந்தியா மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இது ஒரு பெரிய பின்னடைவு. நாம் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நாட்டில் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது.

வேக்சின் தான் ஒரே தீர்வு

வேக்சின் தான் ஒரே தீர்வு

இந்தியாவில் இதுவரை 125 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதைத் தாண்டிய 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா வேக்சின்கள் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நாம் வேக்சின் பணிகளில் மட்டும் தீவிரம் காட்டினால் போதும், ஓமிக்ரான் தாக்கத்தை நிச்சயமாகத் தடுக்க முடியும்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    பூஸ்டர் டோஸ்

    பூஸ்டர் டோஸ்

    பொதுமக்களுக்கு வேக்சின் அளிப்பதிலேயே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் .அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். இதுவரை வேக்சின் போடாதவர்களும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்களுக்குக் கூடுதல் டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

    10 மடங்கு வேகம்

    10 மடங்கு வேகம்

    ஓமிக்ரான் கொரோனா லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. ஆனால், அது டெல்டா கொரோனாவை காட்டிலும் 10 மடங்கு வேகமாகப் பரவும் திறனைக் கொண்டிருக்கலாம். எனவே, ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர எடுக்க வேண்டும். பயணத் தடை குறித்த உத்தரவை நாங்கள் ஆதரிக்கவில்லை. இருப்பினும், தேவையற்ற பயணங்களை, குறிப்பாகச் சுற்றுலா மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும். அனைத்து பொது போக்குவரத்துக்கும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    சிறார்களுக்கு வேக்சின்

    சிறார்களுக்கு வேக்சின்

    ஓமிக்ரான் பரவிய ஆப்பிரிக்க நாடுகளில் சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. சிறார்கள் ICU வார்டுகளில் சேர்க்கப்படுவதும் அதிகரித்துள்ளது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள 18 வயதைக் கடந்த அனைவரும் வேக்சின் போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மத்திய 12 முதல் 18 வயதானவர்களுக்கு வேக்சின் செலுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்,

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+