மே 15 வரை 32 விமான நிலையங்கள் மூடல்.. போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!
டெல்லி: நாடு முழுவதும் 32 விமான நிலையங்களை மே 15 வரை (காலை 5:29 மணி வரை) மூட சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் பெயரில் இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் எல்லையோர மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தான் ராணுவம் மாறி மாறி தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் என அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இவை அனைத்தையும் இந்திய ராணுவம் கச்சிதமாக முறியடித்தது. டிரோன்கள் நடுவானிலேயே அழிக்கப்பட்டன.
இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் காரணமாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தனர். நேற்று இரவு நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி கூட பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஐபிஎல் தொடரே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வட இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.
இதனால், நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வடக்கு, வடமேற்கு பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையோரம் இருக்கும் மாநிலங்களில் இருக்கும் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அதன்படி, ஜம்மு, காஷ்மீரின் ஸ்ரீநகர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ், தர்மசாலா, லே, சண்டிகர் உள்ளிட்ட விமான நிலையங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு மூடப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும்போது திருப்பி பதிலடி கொடுக்க இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்கான இந்தியா, எல்லை மாநிலங்களில் உள்ள முக்கியமான விமான நிலையங்களை மூடியது.
இதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விமானங்கள் இந்த விமானநிலையங்களுக்கு இயக்கப்படாது என அறிவித்துள்ளது.
ஏர்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர் போன்ற விமான நிறுவனங்கள், மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையை மே 10-ஆம் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
STORY | 32 airports shut for civilian flight operations till May 15: DGCA
— Press Trust of India (@PTI_News) May 9, 2025
READ: https://t.co/HlU3molb7M pic.twitter.com/cnVEyih4qe
முன்னதாக நாளை வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என முதலில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் 15 ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, ஷிம்லா, ஜெய்சால்மர், பதான்கோட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர், அம்ரிஸ்டர், பதிண்டாம் ராஜ்கோட், போர்பந்த உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
நேற்று இரவு இந்தியாவின் எல்லையோர பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் சுமார் 400 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்தியா தாக்குதல் நடத்துவதை தடுக்க பயணிகள் விமானத்தை கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்தியது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications