என்னை தொட்ருக்கவே கூடாது.. மோடி அமித்ஷாவுக்கு அபிஜித் தீப்கே வார்னிங்.. சிஜேபியின் அடுத்த பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அரசியலை அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் 2 ஆணையர்களே எஸ்ஐஆர் பணிகளில் மோசடி நடைபெற்றதாக போர் கொடி தூக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எதிர்த்து போராடுகின்றன. டெல்லி போலீசார் கரப்பான் பூச்சி ஜனதா தலைவர் அபிஜித் தீப்கேவை கைது செய்தனர். விடுதலையான அவர், டெல்லி காவல்துறையினர் ரவுடிகளை போல நடந்து கொண்டனர். சர்வாதிகாரத்துக்கு எதிராக ரோட்டில் இறங்கி போராடுவோம் என்று எச்சரித்துள்ளார்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டம் தீவிரமாகியுள்ளது. சிஜேபி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவை விமானத்தில் கைது செய்தனர். இந்நிலையில் அவர் விடுதலையாகியுள்ளார். டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சி தலைவர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சிஜேபி மீண்டும் ரோட்டில் இறங்கி போராடுவோம். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை பார்த்து பயப்பட மாட்டோம். அவர்கள் என்னை ஒருமுறை அல்ல, 100 முறை சிறையில் அடைத்தாலும் கவலைப்பட மாட்டேன்.

Abhijeet Dipke Modi

டெல்லி போலீஸ் மீது புகார்

சர்வாதிகாரத்திற்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். நான் எந்த பிணைப்பத்திரத்திலும் கையெழுத்திடவில்லை. விரைவில் உங்களின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவோம். விமானத்தில் வைத்து கைது செய்ய நாங்கள் நாங்கள் என்ன தீவிரவாதிகளா. மோடி ஒரு சர்வாதிகாரி. நாட்டையே அதானியிடம் விற்றுவிட்டார். போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை போலீசார் இன்னும் எத்தனை காலம் செய்வார்கள். ஈவு இரக்கம் இல்லாமல் சிறுமிகளை கூட அடித்துள்ளனர். மோடி, அமித்ஷாவை மகிழ்விப்பதற்காக குழந்தைகளை கொலை செய்வார்களா.

என்னுடைய பாட்டி இறந்துவிட்டதாக டெல்லி போலீசார் என்னிடம் கூறினர். உறவினரிடம் பேச இரண்டு நிமிடங்கள் என்னுடைய செல்போனை கொடுக்குமாறு கேட்டேன். காவல்துறையினர் மறுத்துவிட்டனர். செல்போன் எண்ணை கூறு என்கிறார்கள். அந்த எண் என்னுடைய நினைவில் இல்லை என்பதற்காக தான் செல்போனை கேட்டேன். காவல்துறையினர் தரவில்லை. அதிகாலை 3.30 மணிக்கு என்னை எழுப்பிய போலீஸ், நான் கைது செய்யப்பட்டதை அவர்களிடம் கூறுமாறு சொன்னார்கள்.

பெற்றோருக்கும் தொல்லை

நாள் முழுவதும் அவர்களின் கஸ்டடியில் வைத்திருந்தனர். என்னை கைது செய்திருந்தால் ஏன் பகலிலேயே அவர்களிடம் சொல்லவில்லை. அதிகாலை 3.30 மணிக்கு சொல்ல வேண்டிய அவசியம் என்ன. காலை வரை காத்திருக்க முடியாத என்று போலீசாரை கேட்டேன். கைது செய்ததை அதிகாலை 3.30 மணிக்கு சொல்ல என்ன சட்ட நடைமுறை இருக்கிறது. என் பெற்றோருக்கு ஏற்கனவே உடல்நல குறைபாடுகள் இருக்கிறது. பாட்டி இறந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுப்பதே காவல்துறையின் நோக்கமாக இருந்தது. டெல்லி காவல்துறையினர் சீருடை அணிந்த ரவுடிகள் போல செயல்பட்டனர். அவர்களிடம் மனிதநேயமே இல்லை. அவர்களை சீருடை அணிந்த ரவுடியாக அமித்ஷா மாற்றிவிட்டார். போராடிய பெண்களிடம் காவல்துறையினர் தவறாக நடந்துகொண்டனர். ஆனால் அவர்களுக்கு அமித்ஷா பதவி உயர்வு வழங்கியுள்ளார். நாட்டை ரவுடிகளே ஆட்சி செய்கிறார்கள். அதனால் ரவுடிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+