"ஒன்றிய" அரசிடமே பேசியாச்சு.. "கர்நாடகத்துக்கு அனுமதி கிடையாது".. முக ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!
டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்துள்ளார்
டெல்லி: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது என்று டெல்லியில் முதல்வர் முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது... ஆனால், இதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காரணம், நீர் ஆதாரமான காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால், டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்... நெல் உற்பத்தி குறையும் என்பதாலேயே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அணை
ஆனால், கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், அணையை கட்டியே தீருவோம் என்று சொல்லி வருகின்றனர்.. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது...

எதிர்ப்பு
அதில் மேகதாதுவில் எந்த கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டு, அந்த தீர்மானத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள் குழு டெல்லி சென்று வழங்கியிருந்தது.

பேட்டி
இந்நிலையில், இது தொடர்பாக பேசுவதற்காக நேரடியாகவே ஸ்டாலின் நேற்றைய தினம் டெல்லி சென்றார்.. இன்று பகல் 12 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து பேசினார்... அப்போது மேகதாது அணை விவகாரம் குறித்து எடுத்துரைத்ததாக தெரிகிறது.. பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

அழைப்பு
"தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் ஒப்புக் கொண்டுள்ளார். சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பேரவையில் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படுகிறது.. பேரவையில் கலைஞரின் உருவப்படத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க உள்ளார்...

மதுரை
மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்ட குடியரசு தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஓரிரு நாட்களில் விழாவின் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்... 7 பேர் விடுதலைக்காக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை திமுக அரசு முன்னெடுக்கும்.

கர்நாடகம்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை... உரிய நேரத்தில் ஆலோசனை நடத்தி பள்ளிக் கல்லூரிகளை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications