ஒரே நாடு ஒரே தேர்தல் வழியே அதிபர் ஆட்சி? கர்நாடகா, கேரளா முதல்வர்கள் சித்தராமையா, பினராயி எதிர்ப்பு!
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர பாஜக திட்டமிடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தியது. ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு- ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைன் இந்த ஒப்புதலுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பது தேவையற்றது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையிலும் சாத்தியமற்றது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாக இருக்கிறது. பணவீக்க விகிதம் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் திசை திருப்புவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனில் அரசியல் சாசனத்தில் நிறைய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஐந்து அத்தியாயங்களை முழுமையாக மாற்ற வேண்டும். தற்போதைய நிலையில் அரசியல் சாசன திருத்தம் என்பது சாத்தியம் இல்லாதது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடியதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அனைத்து மாநில அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் மத்திய அரசிடம் குவிக்க வகை செய்யும் இந்த திட்டம். லோக்சபா தேர்தல் தோல்விகளில் இருந்து பாஜக இன்னமும் பாடம் கற்கவில்லைதான். ஜனநாயக இந்தியாவை அதிபர் ஆட்சியை முறையை நோக்கி சங் பரிவாரங்கள் நகர்த்திக் கொண்டு இருக்கின்றன என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications