டெல்லியில் கோச்சிங் சென்டர் தரைதளம் நீரில் மூழ்கியது.. 3 பேர் பலி.. ஒருவர் மாயம்! மீட்பு பணி தீவிரம்
டெல்லி: தலைநகர் டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ல ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் திடீரென தண்ணீர் புகுந்தது. இதில், பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி உள்பட 3 பலியாகினர். ஒருவர் மாயமாகியுள்ளார். முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் மத்திய மாநில அரசு பணிகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், டெல்லியில் உள்ள ஓல்டு ராஜேந்திர நகர் பகுதியில் பல ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த பயிற்சி மையங்களில் ஏராளமான இளம்பெண்களும், இளைஞர்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஒல்டு ராஜேந்திர நகரில் ராவ் ஐ.ஏ.எஸ் கோச்சிங் செண்டர் என்ற பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் தரை தளத்தில் உள்ள அறையில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் வழக்கம் போல தேர்வுகளுக்காக படித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்பொது இரவு 7 மணியளவில் திடீரென்று தரைதளத்திற்கு வெள்ளம் போல தண்ணீர் புகுந்து. இதில் ஒரு இளம்பெண் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் ஒருவரை காணவில்லை.
உடனடியாக இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினரும் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்விடத்திற்கு பாஜக எம்பி பன்சுரி ஸ்வராஜ், எம்.சி.டி மேயர் ஷெல்லி ஓபராய் உள்ளிட்டோர் வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். ராட்சத மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியெற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரெட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தவறுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்றார். டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த தேர்வர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரில் மின் கசிவு இருந்துள்ளது. இதை அறியாமல் நடந்து சென்ற தேர்வர் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த சம்பவமும் மேற்கு டெல்லியில் தான் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications