டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டுப்ளிகேட் போடாமல் தெருவிலிறங்கி மக்களை சந்திப்பார் கம்பீர் என நம்புகிறோம்.. ஆம் ஆத்மி

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள கவுதம் கம்பீர், இதன் பிறகாவது அவரை போன்ற நகலை அனுப்பாமல் அவரே நேரில் சென்று மக்களை சந்திப்பார் என நம்புவதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

முன்னதாக கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட முள்ளாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தேர்தல் பிரச்சாரத்தின் போது வெயில் தாங்காமல் தன்னை போன்ற உருவ அமைப்புடைய ஒருவரை, காருக்கு வெளியில் நிற்க வைத்து பிரச்சாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Come down to the dusty roads and hear the grievances of the people.. Aam Aadmi Advice to Gautam Gambhir

அந்த நகல் மனிதரை காருக்கு நடுவே வெயிலில் நிற்க வைத்து விட்டு, கம்பீர் காருக்குள் ஏசி காற்றில் அமர்ந்து வந்ததாக புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இது தொடர்பாக விளக்கமளித்த பாஜக, பிரச்சாரத்தின் இடையில் சில நிமிடங்கள் இடைவெளி எடுப்பது சகஜம் தான். வெயிலின் காரணமாக சிறிது சோர்வடைந்த காம்பீர், காரில் ஓய்வு எடுத்தார்.

அப்போது தான் கம்பீருடன் எப்போதுமே இருக்கும் கவுரவ் அரோரா வாக்காளர்களை பார்த்து கை அசைத்து கொண்டு வந்தார் என கூறியது. இந்நிலையில் இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி மீண்டும் கையில் எடுத்துள்ளது.

இது பற்றி பேசிய ஆம் ஆத்மி கட்சி செய்தி தொடர்பாளரான சவுரவ் பரத்வாஜ், டெல்லியின் எம்.பி-க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக வேட்பாளர்கள் 7 பேருக்கும், ஆம் ஆத்மி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

வெற்றி பெற்றுள்ள 7 எம்.பி-க்களும் மத்திய அரசின் கீழுள்ள டெல்லி காவல்துறை, டெல்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாநகராட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு, டெல்லிக்கு தேவையான நிலுவையிலுள்ள அனைத்து திட்டங்களை நிறைவேற்ற உதவ வேண்டும் என கோரினார்.

சிங்கப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை சிங்கப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டெரிக்கும் வெயிலில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து வாக்கு கேட்டனர். ஆனால் தற்போது வெற்றி பெற்று எம்.பி ஆகியுள்ள கவுதம் கம்பீரோ, ஏசி காரில் அமர்ந்து கொண்டு தனக்கு மாற்றாக வேறு ஒருவரை வெயிலில் நிற்க வைத்து பிரச்சாரம் செய்தார்.

எனவே தற்போது வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகியுள்ள, அவர் புழுதி படிந்த சாலையில் இறங்கி மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அப்போதுதான் மக்களை மன்னிப்பார்கள் என்று கூறினார்

English summary
Aam Aadmi Party has said that Gautam Gambhir, who is elected as Lok Sabha member, does not send a copy like this after him and believes he will personally go and meet people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X