ஜே.என்.யூ. துணைவேந்தரை நீக்க வேண்டும்- காங். உண்மை அறியும் குழு வலியுறுத்தல்
டெல்லி: ஜே.என்.யூ. வன்முறைகள் தொடர்பான அதன் துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
டெல்லி ஜே.என்.யூவில் ஜனவரி 5-ந் தேதி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் டெல்லி போலீசார், இடதுசாரி மாணவர்கள்தான் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். இதனை இடதுசாரி மாணவர் சங்க நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

காங். குழு ஆய்வு
இந்நிலையில் ஜே.என்.யூ. வன்முறைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் 5 பேர் கொண்ட குழு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், எம்.பி. ஹிபி ஈடன், முன்னாள் ஜேஎன்யூ காங். மாணவர் தலைவர் சையன் அன்வர் ஹூசைன், டெல்லி பல்கலைக் கழக காங். முன்னாள் தலைவர் அம்ரிதா தவான் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்தது.

பணி நீக்கம் செய்ய வேண்டும்
ஜே.என்.யூ. மாணவர்கள், பேராசிரியர்களிடம் இக்குழு விசாரணை நடத்தி பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஜே.என்.யூ. வன்முறைகள் தொடர்பாக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஜனவரி 5-ந் தேதி வன்முறைகள் தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்.

முறைகேடுகள் தொடர்பான விசாரணை
ஜெகதீஷ் குமார் 2016-ம் ஆண்டு ஜனவர் 27-ந் தேதி துணைவேந்தராக பொறுப்பேற்றார். அவரது பணிகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். மேலும் அவரது பணி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி, நிர்வாக முடிவுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

கிரிமினல் விசாரணை
சபர்மதி, பெரியார் விடுதிகளில் மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான கிரிமினல் விசாரணை நடத்த வேண்டும். ஜே.என்.யூ. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

டெல்லி போலீசார் மீது புகார்
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அழைத்தும் பாதுகாப்புக்கு வர மறுத்த டெல்லி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்திருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் உண்மை அறியும் குழு பரிந்துரைத்துள்ளது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications