இத்தாலிய சோனியா... அர்னாப் கோஸ்வாமியின் நேரடி தாக்கு- கொந்தளித்த காங். - கைது செய்ய வலியுறுத்தல்
டெல்லி: மகாராஷ்டிரா பால்கரில் சாமியார்கள் இருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசிய ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் குழந்தை திருடும் கும்பல் என கருதி 2 சாமியார்களையும் ஓட்டுநர் ஒருவரையும் உள்ளூர் மக்கள் அடித்து படுகொலை செய்தனர். இப்படுகொலை சம்பவத்தில் எந்த மத பின்னணியும் இல்லை என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்திருந்தார்.

ஆனாலும் பால்கர் படுகொலையை இந்துத்துவா ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை. இந்த நிலையில் ரிபப்ளிக் டிவியில் இது பற்றி அதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி விவாதம் நடத்தினார்.
அப்போது திடீரென காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை இச்சம்பவத்தில் தொடர்புபடுத்தி அர்னாப் கோஸ்வாமி விமர்சித்தார். இத்தாலிய சோனியா என்றும் சுட்டிக்காட்டி பேசினார் அர்னாப். இது காங்கிரஸ் கட்சியினர பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வலியுறுத்தி உள்ளனர். சமூக வலைதளங்களிலும் #ArrestAntiIndiaArnab என்ற ஹேஷ்டேக் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இது டிரெண்டிங்கில் முதலிடத்தையும் பிடித்தது.
இதனிடையே மகாராஷ்டிரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அர்னாப் கோஸ்வாமி மீது காங்கிரஸார் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications