22 ஆண்டுகளுக்குப் பின் வாக்கெடுப்பு- காங். தலைவர் தேர்தல்-நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. காங்கிரஸ் கட்சியில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவராக சோனியா காந்தி, 1998-ல் பொறுப்பேற்றார். மத்தியில் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி ஆட்சியும் நடைபெற்றது. 2000-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சோனியா காந்தியும் ஜிதேந்திர பிரசாதாவும் போட்டியிட்டனர். அத்தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். இதன்பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 2017-ல் ராகுல் காந்தி தலைவராக நியமிக்கப்பட்டார்.

கலகக் குரல்
ஆனால் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அப்போது காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் பதவியேற்றார். கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவியை நேரு குடும்பம் அல்லாத ஒருவர் ஏற்க வேண்டும் என்ற குரலும் வலுத்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். கபில் சிபல், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலரும் காங்கிரஸை விட்டு வெளியேறினர்.

ராகுல் காந்திக்காக தீர்மானங்கள்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும் என காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ராகுல் காந்தியே தலைவராக வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ஆனால் ராகுல் காந்தி இதனை திட்டவட்டமாக நிராகரித்தார். அதேநேரத்தில் நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் கமிட்டிகள், ராகுல் காந்தியே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்தல் அறிவிக்கை வெளியீடு
இதனிடையே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசிதரூர் எம்பி. ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இத்தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30.

அக்.17-ல் தேர்தல்
இத்தேர்தலில் போட்டியிட அதாவது வேட்புமனுத் தாக்கல் செய்ய 10 மாநில காங்கிரஸ் ஆதரவுகள் இருந்தால் போதும். அக்டோபர் 17-ந் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும். சுமார் 9,000 பேர் இத்தேர்தலில் வாக்களிப்பர். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அக்டோபர் 19-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications