லோக்சபா தேர்தல்:பாஜக வென்ற 79 தொகுதிகளில் வாக்கு பதிவு விகிதத்தில் பெரும் குளறுபடி- காங்கிரஸ் 'ஷாக்'
டெல்லி: லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக வென்ற 79 தொகுதிகளில் வாக்குப் பதிவு வித்தியாசத்தில் பெரும் குளறுபடி அம்பலமாகி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. லோக்சபா தேர்தலில் 79 தொகுதிகளில் வாக்குப் பதிவில் குளறுபடி செய்தே பாஜக வெற்ரி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சந்தீப் தீக்ஷித் குற்றம் சாட்டி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில்தான் வென்றது. 2019 லோக்சபா தேர்தலில் 303 இடங்களை கைப்பற்ற பாஜகவால் பெரும்பான்மைக்கான 272 இடங்களைக் கூட பெற முடியாமல் போனது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

வாக்குப் பதிவு குழப்பம்: லோக்சபா தேர்தலின் போதே வாக்குப் பதிவு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது வோட்ஃபார் டெமாக்கரசி Vote for Democracy (VFD) என்ற அமைப்பின் ஆய்வு அறிக்கையை முன்வைத்து காங்கிரஸ் இந்த பிரச்சனையை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சந்தீப் தீக்ஷித் இது தொடர்பாக கூறியதாவது: லோக்சபா தேர்தலில் இறுதி வாக்குப் பதிவு எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதை வோட்ஃபார் டெமாக்கரசி அமைப்பின் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. அதாவது இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு சதவீதம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகளில் உள்ள முரண்பாடுகளை அந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.
ஒடிஷா, ஆந்திரா: தேர்தல் ஆணையத்தின் முதல் அறிவிப்புக்கும் இறுதி அறிவிப்புக்கும் இடையேயான வேறுபாடு 4.7%. மொத்தம் 5 கோடி வாக்குகள் வித்தியாசத்தை அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஒடிஷா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் வாக்குப் பதிவு வித்தியாசம் 12.5% ஆக இருக்கிறது. ஆந்திராவில் தேர்தல் ஆணைய வாக்குப் பதிவு அறிக்கைகளில் 12.48% அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது.
இவ்வளவு வித்தியாசமா?: வோட்ஃபார் டெமாக்கரசி அமைப்பானது பாஜக வென்ற 79 தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு வித்தியாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவின் இறுதி விவரத்தை வெளியிட 11 நாட்களை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துக் கொண்டது. இதேபோல ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவவவின் இறுதி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தாமதமாகவே வெளியிட்டது. இதனால்தான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.
79 தொகுதிகள் விவரம்: லோக்சபா தேர்தலில் 79 தொகுதிகளில் பாஜக, வாக்குப் பதிவில் குளறுபடி செய்தே வெற்றி பெற்றிருக்கிறது. ஒடிஷா 18, மகாராஷ்டி 11, மேற்கு வங்கம்10, ஆந்திரா 7, கர்நாடகா 6, சத்தீஸ்கர் 5, ராஜஸ்தான் 5, பீகார் 3, ஹரியானா 3, மத்திய பிரதேசம் 3 , தெலுங்கானா 3, அஸ்ஸாம் 2, அருணாச்சல பிரதேசம் 1, குஜராத் 1, கேரளா 1 என பாஜக வென்ற 79 தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு வித்தியாசம் இருக்கிறது.
இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications