மிசோரமில் தொங்கு சட்டசபை.. சத்தீஷ்கரில் ஆட்சியை தக்க வைக்குமா காங்? ABP C voter- கருத்து கணிப்பு
டெல்லி: சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் எனவும், மிசோரம் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை எனவும் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. குறிப்பாக சத்தீஷ்கரை பொறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

பாஜக 15 இடங்களில் மட்டுமே வென்றது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இந்த நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. சில மாநிலங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பரப்புரைகளும் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியினை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு: சத்தீஷ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக சத்தீஷ்கரில் 7-ம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
சத்தீஷ்கர்: இது தொடர்பாக ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 45 முதல் 51 இடங்களும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 39 முதல் 45 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தெரிவித்துள்ளது.
சத்தீஷ்கர் கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
காங்கிரஸ்: 45-51
பாஜக: 39 -45
பிற கட்சிகள்: 0-02.
மிசோரம்: இதேபோல் மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெருபான்மைக்கு 21 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். இந்த நிலையில், அங்கு வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை எனவும் தொங்கு சட்ட சபை அமையலாம் என்றும் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மிசோரம் கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
எம்.என்.எப்: 13 -17
காங்கிரஸ்: 10 -14
ZPM : 9 -13
பிற கட்சிகள்; 01 -03.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications