‛தப்பிய காங்கிரஸ்’.. முடக்கப்பட்ட எல்லா வங்கி கணக்குகளையும் மீண்டும் பயன்படுத்த அனுமதி - தீர்ப்பாயம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் ரூ.210 கோடியை வரியாக செலுத்த வேண்டும் எனக்கூறி அதன் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை பயன்படுத்த வருமான வரி மேல்முறையீட்டு வரி தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொருளாளரான அஜன் மக்கான் டெல்லியில் இன்று தெரிவித்தார்.

Congress can operate ‘frozen’ accounts, tax tribunal gives relief after ajay Makhan allegation

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் உள்நோக்கத்தால் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஜனநாயகம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அஜய் மக்கான் கூறியதாவது: நாங்கள் வழங்கும் காசோலைகளை வங்கிகள் ஏற்பது இல்லை என்ற தகவல் நேற்று கிடைத்தது. இதுபற்றி விசாரித்தோம். அப்போது தான் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரசுக்கான வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் நன்கொடைக்காக திறக்கப்பட்ட வங்கி கணக்குகளும் அடங்கும்.

அதோடு ரூ. ரூ.210 கோடிக்கு வருமான வரி கட்டும்படி தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிளின் வங்கி கணக்கு முடக்கப்படுவது என்பத ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்'' என குற்றம்சாட்டி இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் அதில் இருக்கும் நிதியை பயன்படுத்த முடியாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. இத்தகயை சூழலில் தான் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இந்த முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம் வங்கி கணக்கு முடக்கத்துக்கு தற்காலிகமாக விலக்கு வழங்கி உத்தரவிட்டது.

இதன்மூலம் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+