Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இதுதான் கடைசி தேர்தல்.. மோடி மீண்டும் நிச்சயம் சர்வாதிகாரத்தை அறிவிப்பார்.." கார்கே பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், அதுவே நமது நாட்டின் கடைசி தேர்தலாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

 Congress chief Mallikarjun Kharge warns that this could be last election if Modi becomes PM again

அந்த கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் பல முக்கிய கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள்.

சர்வாதிகாரம்: இதற்கிடையே ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கார்கே கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கார்கே, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மோடி வென்றுவிட்டால் நிச்சயம் அவர் சர்வாதிகார ஆட்சியை அறிவிப்பார் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அப்போது நாட்டில் சர்வாதிகாரம் தான் இருக்கும்; ஜனநாயகம் இருக்காது.. தேர்தலும் இருக்காது. இந்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலே நாட்டு மக்கள் வாக்களிப்பதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் (அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம்) நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.

கடைசி தேர்தல்: இதன் மூலம் அவர்கள் தலைவர்களை மிரட்டுகிறார்கள்... சிலர் பயத்தால் நட்பைக் கைவிடுகிறார்கள். சிலர் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள், சிலர் கூட்டணியை விட்டு வெளியேறுகிறார்கள்... இதுவே உங்களுக்குக் கடைசி வாய்ப்பு என்பதை மறந்துவிடாதீர்கள்.. மக்கள் சரியாக வாக்களிக்க வேண்டும். இதற்குப் பிறகு வாக்குப்பதிவு என்பதே இல்லாத சூழல் ஏற்படும்

பாஜக மற்றும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார். இதன் காரணமாகவே அவர் அன்பு நடைப்பயணம் செல்கிறார். ஆனால், பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் வெறுப்பைப் பரப்பும் கடைகளைத் திறந்துள்ளனர். இதன் காரணமாக நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் விஷம், அவை நமது உரிமைகளைப் பறிக்கின்றன" என்றார்.

நட்பு இருக்கு: தொடர்ந்து ஒடிசாவில் இப்போது ஆளும் கட்சியாக உள்ள பிஜு ஜனதா தளம் குறித்தும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் குறித்தும் பேசிய கார்கே, "நரேந்திர மோடிக்கும் நவீன் பட்நாயக் இடையே நட்பு இருக்கிறது. ஆனால் இந்த நட்பால் யாருக்கு என்ன லாபம்? இரட்டை இன்ஜின் அரசு என்பார்கள். ஆனால், இந்த இரட்டை இன்ஜின் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை" என்றார்.

பிஜு ஜனதா தளம் கட்சி தேசியளவில் எந்தவொரு கூட்டணியிலும் இல்லை என்ற போதிலும் பல சந்தர்ப்பங்களில் அவர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறியது குறித்துப் பேசிய கார்கே, "ஒரே ஒரு தலைவர் தான் வெளியேறியுள்ளார். அவர் ஒருவர் வெளியேறியது இந்தியா கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. நான் சொல்கிறேன் இந்தியா கூட்டணி ஒன்றாக இணைந்து நிச்சயம் பாஜகவை வீழ்த்தும்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+