18 நாட்களாக நடந்தவைகள் பற்றி விவாதிக்கணும்.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கோரிக்கை
டெல்லி: கடந்த 7 ஆம் தேதி முதல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல் இன்று முடிவுக்கு வந்துள்ளது. இன்று மாலை 5.00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது. சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 18 நாட்களாக நடந்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்த முயற்சித்தது.

இந்த தாக்குதலை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. எல்லையில் ஷெல் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியும் கொடுத்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 7 ஆம் தேதி முதல் நடந்து வந்த மோதல் இன்று முடிவுக்கு வந்துள்ளது. இன்று மாலை 5.00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் வரும் 12 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டை நிறுத்தம் அறிவித்ததையடுத்து எல்லையில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.
சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், கடந்த 18 நாட்களாக நிலவிய சூழல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு உடனே கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கவும் சிறப்புக் கூட்டம் தேவை என வலியுறுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications