"வெளியேறினார் ராகுல் காந்தி.." 19 ஆண்டுகள் வசித்து வந்த டெல்லி அரசு பங்களாவை காலி செய்தார்
டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் எம்பி பதவியை இழந்தார். இதனிடையே இன்று அவர் தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்துள்ளார்.
கடந்த 2019இல் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் ராகுல் காந்தி பேசும் போது, மோடி என்று பெயர் வைத்துள்ள அனைவரும் ஒரே போல இருப்பதாகச் சொல்லி, சர்ச்சை கருத்து ஒன்றையும் தெரிவித்தார்.
இது அப்போதே முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சமீபத்தில் தான் தீர்ப்பு வந்தது.

ராகுல் காந்தி: காங்கிரஸின் ராகுல் காந்தி வீட்டுவசதிக் குழுவிற்குக் கடிதம் எழுதி காலி செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரும் ஆப்ஷன் இருப்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதுபோன்ற நேரங்களில் காரணங்களைப் பொறுத்து குழு இறுதி முடிவை எடுக்கும். பாஜக எம்பி சிஆர் பாட்டீல் தலைமையிலான இந்த குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஒரு ஆப்ஷன் இருக்கும் போதிலும், ராகுல் காந்தி தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை இன்று அவர் காலி செய்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, எம்பி பதவியை இழந்துவிட்டதால், ராகுல் காந்தி வசிக்கும் அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும் என்று கடந்த மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே இன்று அவர் டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்தார். கடந்த சில நாட்களாகவே ராகுல் காந்திக்குச் சொந்தமான பொருட்கள் அங்கே இருந்து எடுத்துச் செல்லப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் காலி செய்தார்.

காலி செய்தார்: ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் தனது பங்களாவை காலி செய்தார். கடந்த 2005ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதியில் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ராகுல் காந்திக்கு 12 துக்ளக் லேன் பங்களா ஒதுக்கப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளாகவே ராகுல் காந்தி அங்கேயே தான் வசித்து வந்தார். இதனிடையே அவர் கடந்த மார்ச் 23ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
விதியின் படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி அரசு பங்களாவில் தங்கும் உரிமை இல்லை,.. அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன்படி அவருக்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஏப்ரல் 22ஆம் தேதிக்கு முன் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்ற நிலையில், அவர் இன்றே காலி செய்தார். அவர் தனது தயார் சோனியா காந்தியுடன் வசிப்பார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு, ராய்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில், ராகுல் காந்தி தனது இல்லம் குறித்துப் பேசினார். எப்போதும் அரசு பங்களாவில் தங்கியிருப்பதால் தனக்கு ஒருபோதும் வீடு இல்லை என்று அவர் கூறியிருந்தார். மேலும், மீது வலுவான பற்றுதல் இல்லை என்றும் கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications