சிறுபான்மையினரின் நம்பிக்கையை இழக்கிறதா காங்கிரஸ்! ஓக்லா தொகுதி யார் வசம்?
டெல்லி: சிறுபான்மையினருக்காக நாங்கள்தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, கடந்த 2 தேர்தல்களில் சிறுபன்மையினர் அதிகம் வசிக்கும் 'ஓக்லா' தொகுதியில் வெற்றிப்பெறவில்லை. இந்த முறையாவது வெற்றி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு கட்சி தலைமையிடம் எழுந்திருக்கிறது.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிதான் ஓக்லா. இங்கு கடந்த 1993ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 8 தேர்தல்களிலும் சிறுபான்மை வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றிருக்கின்றனர். 1993 முதல் தேர்தலில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பர்வேஸ் ஹஸ்மி என்பவர் வெற்றி பெற்றார். அதற்கு பிறகு இந்த தொகுதி காங்கிரஸ் வசம் வருகிறது.

1998, 2003 மற்றும் 2008 என தொடர்ந்து இந்த தொகுதியில் காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றியை எடுத்திருக்கிறது. இதில் ட்விஸ்ட் என்னவெனில், முதல் தேர்தலில் வெற்றி பெற்ற ஹஸ்மி, அத்துடன் ஜனதா தளம் கட்சியை கை கழுவிவிட்டு காங்கிரஸில் சேர்ந்துக்கொண்டார். அவர்தான் 3 ஆண்டுகள் காங்கிரஸுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்.
ஆனால் 2009ல் தொகுதிக்கான எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. இதனையடுத்து அதே ஆண்டில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ராஷ்டிய ஜனதா தளம் சார்பில் ஆசிப் முகமதுகான் வேட்பாளராக களமிறங்குகிறார். காங்கிரஸ் தனது வேட்பாளரை மாற்றுகிறது. ஹஸ்மிக்கு பதில், ஃபர்ஹாத் சூரி என்பவர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்.
ஆனால் வெறும் 17,804 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகிறார். இவரை விட 2000 வாக்குகள் அதிகம் பெற்று பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் 2ம் இடத்திலும், ராஷ்டிய ஜனதா தளம் வேட்பாளர் 23,394 வாக்குகள் பெற்று முதலிடத்திலும் வருகிறார். இந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 80,719 என்பதால், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளும் குறைவுதான்.
இதனையடுத்து 2013ம் ஆண்டு தேர்தல் சூடுபிடிக்கிறது. விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் மூர்க்கமாக முயற்சிக்கிறது. காங்கிரஸுடன் சேர்த்து மொத்தம் 7 கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. கடந்த முறை வெற்றி பெற்ற ஆசிப் முகமது கான், இந்த முறை காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களம் இறங்குகிறார். மொத்தம் 1,37,632 வாக்குகள் பதிவாகின. இதில் கான் 36.34% வாக்குகளை அதாவது 50,004 வாக்குகளை பெற்று வெற்றி பெறுகிறார். காங்கிரஸ் கை ஓங்க தொடங்கியது.
இது எல்லாம் அடுத்த 5 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. 2014ல் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தவுடன் மாநில அரசியலிலும் மாற்றங்கள் நடக்கின்றன. டெல்லியிலும் கூட. இங்கு ஆம் ஆத்மியின் கை ஓங்குகிறது. 2015 தொடங்கி இன்று வரை இந்த தொகுதியில் ஆம் ஆத்மிதான் வெற்றி பெற்றிருக்கிறது.
1993- ஜனாதளம் வெற்றி -பர்வேஸ் ஹஸ்மி -13,282 வாக்குகள் (30.91%)
1998- காங்கிரஸ் வெற்றி -பர்வேஸ் ஹஸ்மி -32,274 வாக்குகள் (57.83%)
2003- காங்கிரஸ் வெற்றி -பர்வேஸ் ஹஸ்மி -29,876 வாக்குகள் (54.83%)
2008- காங்கிரஸ் வெற்றி -பர்வேஸ் ஹஸ்மி -29,303 வாக்குகள் (28.53%)
2009 (இடைத்தேர்தல்)- ஆர்ஜேடி வெற்றி -ஆசிப் முகமது கான் -23,394 வாக்குகள் (28.98%)
2013- காங்கிரஸ் வெற்றி -ஆசிப் முகமது கான் -50,004 வாக்குகள் (36.34%)
2015- ஆம் ஆத்மி வெற்றி-அமனத்துல்லா கான் -104,271 வாக்குகள் (62.56%)
2020- ஆம் ஆத்மி வெற்றி-அமனத்துல்லா கான் -130,367 வாக்குகள் (66.03%)

ஆம் ஆத்மியின் தொடர் வெற்றி, காங்கிரஸுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் மக்களுக்கு நாங்கள்தான் குரல் கொடுக்கிறோம் என்று காங்கிரஸ் கூறி வந்தாலும், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் ஓக்லா தொகுதியில் கடந்த 2 தேர்தல்களில் காங்கிரசால் வெற்றி பெற முடியவில்லை. எனவே இந்த தடையை இந்த முறை உடைக்க வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றியுள்ளது. காங்கிரஸ் செய்த களப்பணி இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications