அரசியல் லாபத்திற்காகவே சாதி வாரி கணக்கெடுப்பு விஷயத்தை காங்கிரஸ் பயன்படுத்தியது.. அஸ்வினி வைஷ்ணவ்
டெல்லி: அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் போது அது ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய கேபிண்ட ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பு எப்பொது நடைபெறும் என்பது பற்றி தற்போது எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாநிலங்கள் தனியாக ஜாதிவாரியாக நடத்த வேண்டியது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு தற்போதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தபப்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு எப்போதுமே எதிராகத்தான் இருந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது கேபினட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார். இது தொடர்பாக பரிசீலிக்க அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை அளித்தன. பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியதை அடுத்தே, காங்கிரஸ் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தது.
காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சிகளும் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் கருவியாகவே பயன்படுத்தியது என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. சில மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன.
சில மாநிலங்கள் அரசியல் கோணத்துடன் வெளிப்படையாக நடத்தவில்லை. இதுபோன்ற கணக்கெடுப்புகள் சமூகத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தின. நமது சமூகக் கட்டமைப்பு அரசியலால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications