அட யாரு அது! நல்லா பாருங்க.. நள்ளிரவில் திடீரென லாரியில் பயணித்த ராகுல்.. இப்படி ஒரு காரணமா? அசத்தல்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நேற்று நள்ளிரவில் திடீரென்று கார் பயணத்தை ரத்து செய்துவிட்டு லாரியில் சாதாரணமாக பயணித்தது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அவர் லாரியில் பயணித்ததன் பின்னணி காரணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாஜி எம்பியுமான ராகுல் காந்தி கர்நாடகா தேர்தல் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். இவரது தங்கை பிரியங்கா காந்தியுடன் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற பிரியங்கா காந்தியின் பங்கும் உள்ளது.

தற்போது பிரியங்கா காந்தி இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடன் சோனியா காந்தி உள்ளார். இந்நிலையில் தான் நேற்று டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு ராகுல் காந்தி செல்ல முடிவு செய்தார்.
அதன்படி நேற்று டெல்லியில் இருந்து ராகுல் காந்தி காரில் புறப்பட்டார். அவருடன் அவரது பாதுகாப்பு படையினர் சென்றனர். ராகுல் காந்தியின் கார் ஹரியானா மாநிலம் அம்பாலா சென்றது. அப்போது திடீரென காரை நிறுத்தக்கூறினார். காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி சாலையோரம் இருந்த லாரி டிரைவர்களிடம் பேசினார். அதன்பிறகு கார் பயணத்தை தவிர்த்த ராகுல் காந்தி லாரியில் பயணிப்பதாக தெரிவித்தார். மேலும் லாரியின் முன்பக்க இருக்கையில் ராகுல் காந்தி ஏறி அமர்ந்தார்.

இரவு முழுவதும் கண்விழித்து ஓட்டும் லாரி டிரைவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி அறியும் நோக்கத்தில் இந்த பயணத்தை திடீரென ராகுல் காந்தி மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது திட்டமிட்ட ஒரு பயணம் இல்லை. திடீரென்று ஏற்பட்ட பயணம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளார். மேலும் இரவு முதல் காலை வரையிலான இந்த பயணத்தின்போது லாரி டிரைவர், கிளீனர்களை சந்தித்து ராகுல் காந்தி அவர்களின் பிரச்சனைகள் பற்றி கேட்டுள்ளார்.
இதுபற்றி காங்கிரஸ் எம்பி இம்ரான் பிரதாப்கார்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ராகுல் காந்தி மட்டுமே லாரி டிரைவர்களை அணுகி அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டு அறிய முடியும்'' என தெரிவித்துள்ளார். மற்றொரு காங்கிரஸ் தலைவரான சுப்ரியா ஸ்ரீரினேட் "இந்த நாட்டின் குரலை கேட்கவும், நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களை புரிந்துகொள்ளவும் ராகுல் காந்தி விரும்புகிறார்" என தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தின்போது ராகுல் காந்தி வெள்ளை நிற டீசர்ட், கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை சென்றார். இந்த வேளையில் அவர் வெள்ளை நிற டீசர்ட், கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவிலும் அதே உடையில் அவர் பங்கேற்றார். அந்த வகையில் நேற்றும் கூட ராகுல் காந்தி வெள்ளை நிற டீசர்ட், கருப்பு பேண்ட் அணிந்து தான் லாரி பயணத்தை மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications