லக்னோ விமான நிலையத்தில் ராகுல், பூபேஷ் பாகல், சரண்ஜித் திடீர் தர்ணா- போலீஸ் கெடுபிடியால் ஆவேசம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் ஆகியோர் திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். விவசாயிகள் கொல்லப்பட்ட லக்கிம்பூருக்கு தங்களது சொந்த வாகனத்தில் செல்ல அனுமதி மறுத்து போலீசார் வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறியதற்கு கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தை ராகுல் காந்தி நடத்தினார்.
உ.பி. மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்தனர். இதில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்துக்கு ஆறுதல் கூற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் புறப்பட்டனர். ஆனால் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது சீத்தாப்பூர் மாவட்டத்தில் தடுப்பு முகாமில் பிரியங்கா காந்தி அடைக்கப்பட்டுள்ளார். அகிலேஷ் யாதவ், வீட்டை விட்டு புறப்படும்போதே போலீசார் தடுத்தனர்.

தலைவர்கள் தடுத்து நிறுத்தம்
ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளும் லக்கிம்பூர் செல்ல முயன்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டனர். அதேநேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு ஒன்று லக்கிம்பூர் சென்று விவசாயிகள் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறியது. மேலும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்கிம்பூர் செல்ல நேற்று லக்னோ விமான நிலையம் வந்திறங்கினார். ஆனால் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

லக்னோவில் ராகுல்
இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று லக்கிம்பூர் செல்ல முடிவு செய்தது. இதற்காக டெல்லியில் இருந்து லக்னோ செல்லும் விமானத்தில் ராகுல் தலைமையிலான குழு புறப்பட்டது. லக்னோ விமான நிலையத்தில் ராகுல் தலைமையிலான குழு வந்திறங்கியது.

ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி
லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தலைமையிலான குழு தடுத்து நிறுத்தப்படக் கூடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நிலைமை மோசமாகிவிடக் கூடாது என்பதற்காக உத்தரப்பிரதேச அரசு தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்டது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மூவர் லக்கிம்பூர் செல்ல அம்மாநில அரசு அனுமதி அளித்தது. ஆனால் பிரச்சனை வேறுவடிவத்தில் வெடித்தது

ராகுல் குழுவுக்கு போலீஸ் கெடுபிடி
லக்னோ விமான நிலையத்தில் வெளியேறுவதற்கும் லக்கிம்பூர் செல்வதற்கும் சொந்த வாகனத்தை ராகுல் குழு பயன்படுத்தக் கூடாது; போலீசார் வாகனத்தில்தான் செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் குழுவினர் கொந்தளித்துப் போயினர். போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்று ஏதோ செய்ய திட்டமிட்டுள்ளனர் என ஆவேசப்பட்டார் ராகுல் காந்தி. மேலும் எந்த சட்டத்தின்படி இப்படியான கெடுபிடிகள் விதிக்கப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.

ராகுல், 2 மாநில முதல்வர்கள் தர்ணா
அத்துடன் கோபத்துடன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த ராகுல், முதல்வர்கள் பூபேஷ் பாகல், சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் அடங்கிய குழு விமான நிலைய வளாகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகல், சரண்ஜித்சிங் இருவரும் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு பஞ்சாப், சண்டிகர் மாநில அரசுகள் சார்பாக தலா ரூ50 லட்சம் வழங்கப்படும்; மத்திய அரசுக்கு எதிராக போராடும் விவசாயிகள் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்றனர். இதனால் லக்னோ விமான நிலையத்தில் பதற்றம் நீடித்தது. பின்னர் போலீசார் பாதுகாப்புடன் ராகுல் காந்தி உள்ளிட்டோர் சொந்த வாகனத்தில் லக்கிம்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் லக்னோ விமான நிலையத்தில் இருந்து ராகுல் குழுவினர் புறப்பட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications