Entire Political Science மாணவர்தான் காந்தியை சினிமா பார்த்து தெரிஞ்சுக்கனும்..மோடியை தாக்கிய ராகுல்!
டெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் குறித்து காந்தி எனும் சினிமா வந்த பின்னர்தான் தெரியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Entire Political Science படிப்பு படிக்கும் மாணவர்தான் மகாத்மா காந்தியை சினிமாவை பார்த்து தெரிந்து கொள்வர் எனவும் மோடியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் களத்தில் பிரதமர் மோடி பேசுகிற ஒவ்வொரு பேச்சுமே பெரும் சர்ச்சையாகவும் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. முஸ்லிம்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார் மோடி; காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையே முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை என்றார். உங்களது சொத்துகளை பறித்து முஸ்லிம்களுக்கு தரப் போகிறது காங்கிரஸ் என்றார். ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிகளுக்கு தரும் காங்கிரஸ் என்றார். இவை அனைத்தும் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது.

தமிழர்கள் 'திருடர்கள்' : அத்துடன் பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூலத்தின் சாவியே தமிழ்நாட்டில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது; தமிழரான விகே பாண்டியன் தமிழ்நாட்டில் கொண்டு போய் பதுக்கி வைத்துவிட்டார் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார் பிரதமர் மோடி. இதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்தது.
நவீன் பட்நாயக் உடல்நிலை: இந்த வரிசையில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலையை திட்டமிட்டே பாதிப்படையச் செய்துவிட்டனர்; ஒடிஷாவில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் நவீன் பட்நாயக் உடல்நிலை பாதிப்பு குறித்து விசாரிப்போம் என கூறியிருந்தார் மோடி.
மோடியின் 'பரமாத்மா’ கதை எதற்கு தெரியுமா? ஜூன் 4-க்குப் பிறகு பாருங்கள்.. ராகுல் காந்தி பதில்
காந்தியும் காந்தி சினிமாவும்: தற்போது பேட்டி ஒன்றில், தேச விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் குறித்து மோடி கூறியது சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது நமது நாட்டில், காந்தி எனும் சினிமா வராமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியை பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது என்பதுதான் மோடியின் கருத்து.
ராகுல் காந்தி பொளேர் தாக்கு: பிரதமர் மோடியின் இந்த கருத்து காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில், Entire Political Science படிக்கும் மாணவர்தான் மகாத்மா காந்தியை சினிமா பார்த்து தெரிந்து கொள்வார் என காட்டமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, Entire Political Science என்ற பட்டப் படிப்பு படித்ததாக ஒரு சர்ச்சை இருக்கும் நிலையில் அதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. காந்தி படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்திருக்கிறார் என்று உலகத்தின் பலருக்கு தெரிந்திருக்கிறது.
— Selvaperunthagai_Office (@OfficeOfSPK) May 29, 2024
என்று பேட்டியில் சொல்லியுள்ளார் மோடி.
காந்தியின் புகழை சீர்குலைக்க வேண்டுமென்று இப்படியொரு… pic.twitter.com/h9blhb6Yk2
வரலாறு அறியாத மோடி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. காந்தி படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்திருக்கிறார் என்று உலகத்தின் பலருக்கு தெரிந்திருக்கிறது. என்று பேட்டியில் சொல்லியுள்ளார் மோடி. காந்தியின் புகழை சீர்குலைக்க வேண்டுமென்று இப்படியொரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அவரின் வரலாற்றைப் பற்றி சிறிதும் அறியாத மோடி என காட்டமாக விமர்சித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications