மோடியின் ‘பரமாத்மா’ கதை எதற்கு தெரியுமா? ஜூன் 4-க்குப் பிறகு பாருங்கள்.. ராகுல் காந்தி பதில்
பாட்னா: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மோடியிடம் ஊழல் பற்றி அமலாக்கத்துறை விசாரிக்கப் போகிறது.. அப்போது விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே 'பராம்த்மா'வால் அனுப்பி வைக்கப்பட்டவன் என்கிற கதையைப் பேசுகிறார் என விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தல் களத்தில் பிரதமர் மோடியின் பேச்சுகள் கடும் விமர்சனத்தை எழுப்பி இருக்கின்றன. குறிப்பாக "நான் உயிரியல் ரீதியாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப் பிறவி அல்ல. என்னை பூமிக்கு அனுப்பியதே பரமாத்மாதான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்துவதற்காக என்னை கடவுள் பூமிக்கு அனுப்பினார். நான் பெற்றுள்ள ஆற்றல் சாதாரண மனிதர்கள் பெற்றிருப்பதைப் போல கிடையாது. கடவுள் ஒருவரால் மட்டுமே இந்த ஆற்றலைத் தர முடியும்" என்ற மோடியின் பேட்டி இப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பீகாரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியின் பரமாத்மா விவகாரத்தை கையில் எடுத்து விமர்சித்தார். ராகுல் காந்தி பிரசாரத்தில் பேசியதாவது: பரமாத்மா கதையை பிரதமர் மோடி ஏன் பேசுகிறார் தெரியுமா? லோக்சபா தேர்தல் முடிவடைந்ஹ பின்னர் மோடியிடம் அதானி, அம்பானி குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கும். அப்போது எனக்கு எதுவும் தெரியாது. பரமாத்மா என்ன சொன்னாரோ அதை செய்தேன் என சொல்லப் போகிறார் மோடி. அதற்காகவே பரமாத்மா கதையை பேசுகிறார் மோடி.
இந்த நாட்டை பிளவுபடுத்துகிற பிரிவினைவாத பேச்சுகளை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். மிக நீண்டநேரம் பேசுவதை நிறுத்திவிட்டு பீகார் மற்றும் இந்த நாட்டு மக்களுக்கு 10 ஆண்டுகளில் உருவாக்கிக் கொடுத்த வேலைவாய்ப்புகளைப் பட்டியலிட்டு பேச வேண்டும். ஜூன் 4-ந் தேதிக்குப் பின்னர் மோடி நாட்டின் பிரதமராகவே மாட்டார் என எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
பீகார், உ.பி.யில் "இந்தியா" கூட்டணிக்கான ஆதரவு அலை வீசுகிறது. மத்தியில் இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கு ரூ8,500 கொடுப்போம். இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததும் பெண்களில் வங்கிக் கணக்குகளில் ரூ8.500 செலுத்துவோம். ஏழைப் பெண்கள் முன்னேற்றத்துக்காக ஆண்டுக்கு ரூ1 லட்சம் தருவோம். நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்போம். நாட்டின் ராணுவ வீரர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக நடத்தும் அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்வோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications