பதவி வேண்டாம்.. ராகுல் காந்தி தொடர் பிடிவாதம்.. இடைக்கால தலைவரை நியமிக்க காங். தீவிரம்
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பணிகளை ராகுல் கவனிக்காமல் இருப்பதால் அக்கட்சிக்கு இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 421 இடங்களில் போட்டியிட்டு வெறும் 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.

பாஜகவின் நெகட்டிவ் பக்கங்களை கூறி 3 மாத காலமாக பிரச்சாரம் மேற்கொண்டும் வெற்றி பெற முடியவில்லை என்பதாலும், பிரியங்காவுக்கு பொறுப்பு கொடுத்தும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை என்பதால் ராகுல் கடும் அதிருப்தி அடைந்தார். நேரு குடும்ப தொகுதியான அமேதியிலும் ராகுல் தோல்வியை தழுவினார். இதனால் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த மே 25 அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக தெரிவித்தார். அதோடு காங்கிரசின் மிக மோசமான தோல்விக்கு கமல்நாத், அசோக்கெலாட், ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் சுயநலத்துடன் நடந்து கொண்டதே காரணம் என்று ராகுல் குற்றம்சாட்டினார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், ராகுலின் ராஜினாமாவை அவர்கள் ஏற்கவில்லை.
ராகுல் ராஜினாமா செய்தால் தற்கொலைகள் நிகழும் என ப.சிதம்பரம் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மற்றும் அவரது சகோதரி பிரியங்கா, திமுக தலைவர் ஸ்டாலின், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் அவரை சமரசம் செய்து, தலைவர் பதவியில் நீடிக்க செய்ய முயன்றனர். ஆனால் ராகுல், மறுத்து விட்டார். கடந்த 18 நாட்களாக அவர் கட்சி நிர்வாகம் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஒதுங்கியே இருக்கிறார்.
இதன் காரணமாக காங்கிரஸ் நிர்வாகப் பணிகளில் குழப்பமான நிலை உருவாகி உள்ளது. இது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியிலும் சில முடிவுகளை எடுக்க முடியாத அளவுக்கு தொடர்கிறது என்று கூறுகிறார்கள். கட்சியிலும் ஆட்சியிலும் சில குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால் இந்த குழப்பங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே அக்கட்சிக்கு இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால தலைவர் நியமனம் குறித்து கடந்த முறை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலேயே பேசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இறுதியாக ராகுலிடம் ஒரு தடவை பேச முடிவு செய்துள்ளனர். அதன்பிறகும் ராகுல் பிடிவாதமாக இருந்தால் மூத்த தலைவர் ஒருவர் தற்காலிக தலைவர் பொறுப்பை ஏற்பார். இந்த இடைக்கால தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது. இதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர்களைக் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இந்த குழுவினரோடு தற்காலிக தலைவர் கலந்தாலோசித்து அதன் பின்னரே முடிவுகள் எடுக்க முடியும்.
கடந்த ஆட்சியில் காங்கிரசுக்கு மொத்தம் 44 உறுபினர்கள் மட்டுமே இருந்தனர். அப்போது அக்கட்சியின் பாராளுமன்ற மக்களவை தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே தோல்வியடைந்து விட்டதால், அந்த பொறுப்பை இம்முறை ராகுலே ஏற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள். முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ராகுலை சமீபத்தில் சந்தித்து இதுகுறித்து பேசியிருந்தார் இருபினும் சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
ராகுலின் இந்த தொடர் மவுனத்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி மற்றும் மக்களவைக் குழுத் தலைவர் யார் என்பதற்கான பதில் எப்போது தெரியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் வரும் 17ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவுள்ளது. அப்போது இந்த கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, துணை சபாநாயகர் தேர்வு மற்றும் 23 முக்கிய மசோதாக்கள் தாக்கல், பட்ஜெட் தாக்கல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளன. இதனால் இந்த இரு பதவிகளும் வரும் 17 ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம், என்ன செய்யப்போகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள் என்பது வரும் வாரத்தில் தெரிந்து விடும்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications