Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் வாக்கு வங்கி அதிகரிக்கும்! ஆனால் ஆட்சி அமைக்க போவது பாஜக தான்! சிஎஸ்டிஎஸ் பரபர ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த தேர்தல்களைக் காட்டிலும் காங்கிரஸ் கூடுதல் வாக்குகளைப் பெறும் என்ற போதிலும் அது பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்காது என்று லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் அமைப்பு நடத்திய எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

நமது நாட்டில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசிக் கட்ட தேர்தல் நடந்தது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress 2024

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சனிக்கிழமை மாலை முதலே எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில் பெரும்பாலான சர்வேக்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கூறப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் சர்வே: இந்தச் சூழலில் லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் அமைப்பு நடத்திய எக்ஸிட் போல் சர்வே குறித்த ரிப்போர்ட் இப்போது வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குக் கடந்த முறையைக் காட்டிலும் இந்த லோக்சபா தேர்தலில் சிறப்பாகச் செயல்படலாம். இருப்பினும், அது வாக்கு சதவிகிதத்தை மட்டுமே உயர்த்துமே தவிர பெரியளவில் சீட்கள் அதிகரிக்கும் அளவுக்கு போதுமானதாக இருக்காது என்று லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாஜக தனது கோட்டைகளில் இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டதாகவும் மற்ற மாநிலங்களிலும் கணிசமான வெற்றியைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய சர்வேயில் இது தெரிய வந்துள்ளதாக லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவுக்குச் சாதம்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கே சாதகமான ஒரு சூழல் நிலவுவதாக லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாஜக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அரசை அமைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்கள் இணைந்து பாஜகவின் வெற்றியைச் சாத்தியப்படுத்தி உள்ளதாகவும் லோக்நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜக காங்கிரஸ் முறையே 37.4% மற்றும் 19.5% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்த முறை அது உயர வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த முறை பாஜக 40% வாக்குகளையும் காங்கிரஸ் 23% வாக்குகளையும் பெற வாய்ப்பு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தொகுதிகள்: வெல்லும் தொகுதிகள் எனப் பார்க்கும் போது கடந்த முறையைக் காட்டிலும் பாஜக இந்த முறை 3% வரை கூடுதல் இடங்களில் வெல்லும் என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ள போதிலும், அது வெல்லும் தொகுதிகள் பெரியளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாகக் கடந்த முறையுடன் ஒப்பிடும் போது 3% இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கூடுதலாக வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ்: கடந்த இரு லோக்சபா தேர்தல்களை விடக் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்ற போதிலும் அது பாஜகவுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வாக்குகள் இந்த முறை அதிகரிக்கும் அதேநேரம் பிராந்திய கட்சிகளின் வாக்கு வங்கி கணிசமாகக் குறையும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தனது இருப்பை அதிகரிக்க பாஜக கடுமையாக முயன்றது. அதற்கு நல்ல பலன் இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அவர்களின் வாக்கு வங்கி பல மாநிலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படிப் பரவலாகவே வாக்குகள் அதிகரித்துள்ளதால் அவை வெற்றிக்கு உதவவில்லை என்றும் இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+