இது நாட்டுக்கு பேரழிவை கொடுக்கும்.. ரொம்ப தப்புங்க! நீடா அம்பானிக்கு கார்த்திக் சிதம்பரம் எச்சரிக்கை
டெல்லி; இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என நீடா அம்பானி கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் இது நாட்டுக்கு பேரழிவை கொடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், திமுக கூட்டணி ஆட்சி குறித்த சொன்ன கருத்துக்கு, அவரின் சொந்தக் கட்சியின் சீனியர் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அந்த சர்ச்சையே ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் விவகார்த்தில் நீடா அம்பானி கூறிய கருத்துக்கு கார்த்திக் பதிலடி கொடுத்து பரபரப்பைப் பற்ற வைத்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல்முறையாக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக்ஸ் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, சர்வதேச ஒலிம்பிக்ஸ் குழு தலைவரும், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவருமான நீடா அம்பானி கலந்து கொண்டனர். அப்போது நீடா அம்பானி, "ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனைகளை நிகழ்த்துவார்கள். ஒலிம்பிக்ஸில் இந்தியா சாதிக்க வேண்டும் என்றும், ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பது 140 கோடி மக்களின் ஆசை. ஒலிம்பிக்கை இந்தியா நடத்தப் போகும் நாள் தொலைவில் இல்லை. அதற்கான பாதையை இந்த ஒலிம்பிக் இல்லம் அமைத்துள்ளது." என்று கூறியிருந்தார்.
இதற்கு தன் எக்ஸ் பக்கத்தில் பதலளித்துள்ள கார்த்திக் சிதம்பரம், "இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். அரிதாகப் பயன்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். நாடு கடுமையான நிதிச்சுமைக்கும், கடனுக்கும் தள்ளப்படும். முதலில் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு வழங்கி, அவர்களுக்கு தேவையான பயிற்சி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களால் உலகளவில் போட்டி போட முடியும். இந்தியாவில் இருந்து சாம்பியன்களை உருவாக்குவதில் தொடங்குவோம்." என்று கூறியுள்ளார்.
மேலும், ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்திய நாடுகள் அதன் பிறகு கடுமையான பொருளதார நெருக்கடியில் சிக்கியது குறித்த செய்திக்கான இணைப்பையும் கார்த்திக் பகிர்ந்துள்ளார். முன்னதாக கடந்த 2023 அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, "2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விளையாட்டு மூலம் பதக்கங்களை மட்டுமல்லாமல் இதயங்களை வென்று,அமைதியையும் பரப்ப முடியும். எனவே 140 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உதவியுடன் அந்த கனவை நிறைவேற்ற விரும்புகிறோம்." என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications