சட்டென சாலையில் அமர்ந்த ராகுல் காந்தி.. எதிர்பார்க்காத டெல்லி போலீஸ்! தாய்க்காக தனயன் செய்த தர்ணா
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை 2 வது கட்ட விசாரணை நடத்தி வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் மூத்த எம்பிக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
Recommended Video
நாட்டின் விடுதலைக்கு முன்னர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செயல்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பத்திரிகை இழப்பை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியது.

சுப்பிரமணிய சாமி வழக்கு
இருப்பினும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டு 2010 ஆம் ஆண்டு அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வசம் உள்ளன. இந்த நிலையில் பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்தார்.

அமலாக்கத்துறை வழக்கு
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்நிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிதி வழங்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ராகுல் காந்தியிடம் விசாரணை
இந்த நிலையில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராகுல் காந்தி மட்டும் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல கட்ட விசாரணைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோனியா காந்தியிடம் விசாரணை
கொரோனா பாதிப்பில் இருந்து சோனியா காந்தி மீண்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 21 ஆம் தேதி சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அப்போதும் நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. இந்த நிலையில் இன்று 2 வது கட்ட விசாரணைக்காக சோனியா காந்தி ஆஜராகி இருக்கிறார்.

ராகுல் தலைமையில் போராட்டம்
இந்த நிலையில் அமலாக்கத்துறையையும் மத்திய அரசையும் கண்டித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திலிருந்து பேரணியாக வந்து விஜய் சவுக் பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போலீசார் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

மல்லிகாஜுன் கார்கே
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "இது அனைத்தும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சதி. எதிர்க்கட்சிகளை அழித்து குரல்களை நசுக்க நினைக்கிறார்கள். எங்களுக்கு இதனால் பயமில்லை. தொடர்ந்து போராடுவோம். காவல்துறையிடம் அனுமதி பெற்று அவர்களின் அறிவுறுத்தலின்படியே இங்கு போராடினோம்" என்றார்.
-
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி











Click it and Unblock the Notifications