எனது இதயமே விவசாயிகளிடம்தான் இருக்கிறது...அவங்கதான் முக்கியம்...ராகுல் காந்தி உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கண்ணியத்துடனும், மரியாதையுடனும் அநியாய சக்திகளை போராடும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் எனது இதயம் இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாம் இழந்தவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுவோம். நம்மை பாதுகாத்தவர்கள், நமக்காக தியாகம் செய்தவர்கள் ஆகியோருக்கு நன்றி கூறுவோம் எனவும் ராகுல் காந்தி வலியுத்தியுள்ளார்.

 Congress MP Rahul Gandhi says My Heart With Farmers

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 37-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாயிகளுடன் 6 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் அவை அனைத்தும் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றன. அடுத்ததாக 7ம் கட்ட பேச்சுவார்த்தை 4ம் தேதி நடைபெற உள்ளது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் புத்தாண்டு பிறந்துள்ளதால் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

புதிய ஆண்டு துவங்கியுள்ளது. நாம் இழந்தவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுவோம். நம்மை பாதுகாத்தவர்கள், நமக்காக தியாகம் செய்தவர்கள் ஆகியோருக்கு நன்றி கூறுவோம். கண்ணியத்துடனும், மரியாதையுடனும் அநியாய சக்திகளை எதிர்த்து போராடும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் எனது இதயம் இருக்கிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+