செம கலாய்.. குடியரசு தினத்தில் மோடிக்கு காங். செய்த ஸ்பெஷல் அமேசான் ஆர்டர்.. என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து, காங்கிரஸ் கட்சி கலாய்த்துள்ளது.

டெல்லியில் இன்று குடியரசுத் தின விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அங்கங்கே சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களும் நடத்தது. முக்கியமாக டெல்லியில் குடியரசு தினத்திற்கு இடையிலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தது .

பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த நிறைவேற்றப்பட்டது சட்டமானது. நாடு முழுக்க இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

முக்கியம்

முக்கியம்

இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் முழுக்க இந்திய அரசியலமைப்புச்சட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடக்கும் போராட்டங்களில் மாணவர்கள் அடிக்கடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை படிப்பது வழக்கமாகி உள்ளது. டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் பெண்கள் நடத்தும் போராட்டத்திலும் இதே போல, எல்லோரும் சேர்ந்து இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை படித்து வருகிறார்கள். பாஜகவும் இதை படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

யார் டிரெண்ட்

யார் டிரெண்ட்

இந்த டிரெண்டை முதலில் கொண்டு வந்தது, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தான். அவர்தான் டெல்லியில் ஜம்மா மசூதியில், இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை படித்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். பின் இவர் சிறையில் நிறைய வேதனைகளை அனுபவித்ததாக கூறினார். கடைசியில் இந்த கைதை டெல்லி ஹைகோர்ட் கண்டித்தது. அதோடு பீம் ஆர்மி தலைவர் ஆசாத்தை விடுதலையும் செய்தது.

அசாத்

அசாத்

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரசேகர் அசாத் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்தினார். அப்போது அவர் நேரடியாக ஷாகீன் பாக் சென்று, அங்கிருக்கும் பெண்களுக்கு ஆதரவு அளித்தார். அதோடு அங்கு அவர் எல்லோர் முன்னிலையிலும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை படித்தார். பாஜக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பார்த்து பயப்படுகிறது. அதனால் அதை நான் படித்து அவர்களுக்கு இந்தியா குடியரசு நாடு என்பதை உணர்த்துகிறேன் என்று ஆசாத் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் குசும்பு

தற்போது ஆசாத்தின் அதே வழியை காங்கிரஸ் கட்சி பின் பற்ற தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் கட்சி பார்சல் அனுப்ப உள்ளது. இதற்காக அமேசானில் ஸ்பெஷல் ஆர்டர் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. உங்களுக்கு இந்த பார்சலை அனுப்புகிறோம். நீங்கள் இந்தியாவை பிரிப்பதற்கு இடையில் நேரம் கிடைக்கும் போது இதை படியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

செம வைரல்

செம வைரல்

இந்த புத்தகத்தை பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆர்டர் செய்துள்ளது. டெல்லியில் தலைமை செயலகத்தில், பிரதமர் மோடி இருக்கும் இ பிளாக் பகுதிக்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி வித்தியாசமாக டிவிட் ஒன்றை செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த டிவிட்டை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+