"எமர்ஜென்சி காலம்! பிரதமர் மோடி சொல்வது சரிதான், ஆனால்.." கடைசியில் பெரிய ட்விஸ்ட் வைத்த ப.சிதம்பரம்
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், அப்போது பிரதமர் மோடி எதிர்க்கட்சியான காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக எமர்ஜென்சி காலத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். இதற்கிடையே பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் சமீபத்தில் தான் நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. இந்தக் கூட்டத்தொடரில் அனைத்து எம்பிக்களும் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.

இந்த முறை லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் பலமாக இருக்கிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப அவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி: ஆனால், மறுபுறம் பிரதமர் மோடி முதல் நாளான நேற்று காலை அவை கூடுவதற்கு முன்பே காங்கிரஸ் மீதான விமர்சனத்தைத் தொடங்கிவிட்டார். எமர்ஜென்சி காலம் நாட்டின் இருண்ட காலம் என்றும் அவர் விமர்சித்தார். அவர் மேலும் கூறுகையில், "இந்திய ஜனநாயகத்தின் மீது கரும்புள்ளி விழுந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்பு எப்படி அகற்றப்பட்டது, நமது நாடு ஒரே இரவில் எப்படி சிறைச்சாலையாக மாறியது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். மீண்டும் ஒரு முறை இதுபோல நடக்கக் கூடாது என்று நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அதாவது ஜூன் 25ஆம் தேதி தான் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது அவசர நிலையை அறிவித்தார். சுமார் 21 மாதங்கள் நமது நாட்டில் எமர்ஜென்சி அமலில் இருந்தது. இதைக் குறிப்பிட்டே பிரதமர் மோடி காங்கிரஸைச் சாடியிருந்தார்.
காங்கிரஸ் பதிலடி: பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்குக் காங்கிரஸ் தரப்பில் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதாகவும் பிரதமர் மோடி நடப்பு கூட்டத்தொடரிலாவது அது குறித்துப் பேசுவார் என நம்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி கொடுத்து இருந்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் இந்த விவகாரத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
ப சிதம்பரம்: இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதை எமர்ஜென்சி காலம் தான் நமக்கு நினைவூட்டுகிறது என்று பிரதமர் கூறினார். அவரது இந்த கருத்து உண்மை தான்.
ஆனால், அத்துடன் வேறு சில விஷயங்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.. இந்த அரசியலமைப்பு தான் மற்றொரு எமர்ஜென்சியை தடுக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டியது.. மேலும் அவர்கள் பாஜகவின் திட்டங்கள் நிறைவேறாமல் இருக்க வாக்களித்தனர்.
மாற்றவே முடியாது: அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை எந்த மனிதனும் அல்லது தெய்வீக ஆட்சியாளர் கூட மாற்ற முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் 18வது மக்களவை தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். இந்தியா தாராளவாத, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற மாநிலங்களின் ஒன்றியமாகத் தொடர்ந்து இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications