"டைம் இல்லை.. சீக்கிரம்!" காங்கிரஸ் மிக முக்கிய முடிவு.! விரைவில் இந்தியா கூட்டணியில் அதிரடி மாற்றம்
டெல்லி: இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதில் காங்கிரஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவை வீழ்த்த நாடு முழுக்க இருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணி உருவான போது அடுத்தடுத்து பல கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியது.

சீட் பங்கீடு: இருப்பினும் சீட் பங்கீடு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்குள் சிக்கல் தொடர்கிறது. இந்த பிரச்சினையைச் சரி செய்யும் முயற்சியில் காங்கிரஸ் இப்போது இறங்கியுள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்த பணிகளைத் தொடங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களிடம் போன் செய்து பேசியுள்ளார்.
தேவைப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நேரடியாகச் சென்று எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸின் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ஜன.14ஆம் தேதி ஆரம்பிக்கும் நிலையில், அதற்குள் சீட் பகிர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலும், விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்தியா" கூட்டணியில் புது பஞ்சாயத்து? ஒரு பக்கம் மம்தா, இன்னொரு பக்கம் நிதிஷ் கடுங்கோபம்! என்னாச்சு
முக்கிய முடிவு: டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் நடந்த ஆலோசனையில் முகுல் வாஸ்னிக் தலைமையிலான சீட் பகிர்வுக் குழுவும் கலந்து கொண்டது. இதில் ராகுல் காந்தி,, முன்னாள் முதல்வர்கள் அசோக் கெலாட் மற்றும் பூபேஷ் பாகேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் எனப் பல கட்சிகள் சீட் பகிர்வுக்குத் தயக்கம் காட்டும் நிலையில், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது சிக்கலாக இருக்கும் என்றே தெரிகிறது.
என்ன சிக்கல்: ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா, "நாடு முழுவதும் இந்தியா கூட்டணி இருக்கும், அதேநேரம் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும். ஏனென்றால் வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸால் மட்டுமே பாஜகவுக்குப் பாடம் புகட்ட முடியும். நாடு முழுக்க வெற்றி திரிணாமுல் கட்சியால் தான் காட்ட முடியும், வேறு எந்த கட்சியாலும் காட்ட முடியாது" என்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியும் அதிகபட்ச இடங்களைக் கேட்கிறது. அவர்கள் மகாராஷ்டிராவின் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி உள்ளிட்ட 23 தொகுதிகளைக் கேட்கிறார். சிவசேனா சுமார் 50% இடங்களைக் கேட்பதும் இந்தியா கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்துகிறது. அங்கே மொத்தமே 48 இடங்கள் இருக்கிறது. என்சிபி கட்சியும் கூட்டணியில் இருப்பதால் சிவசேனாவுக்கு 43 இடங்கள் தரக் காங்கிரஸ் தயங்குகிறது.
பல மாநிலங்கள்: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள 21 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட விரும்புவதாகவே கூறி வருகின்றனர். இரு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி காங்கிரஸைத் வீழ்த்தி இருந்தாலும் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.
பீகாரிலும் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து சீட் பங்கீடு குறித்துத் தெளிவான சமிக்கைகள் வரவில்லை. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸின் மோசமான தோல்வி, சீட் பங்கீட்டிலும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சீட்-பகிர்வு எப்படி இருக்கும் என்பதே பலருக்கும் கேள்வி. 2019இல் இங்கே காங்கிரஸ் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் மட்டும் வென்று இருந்தது.
மேஜர் முடிவு: இப்படிப் பல மாநிலங்களிலும் சிக்கல் இருந்தாலும் அதை அனைத்தையும் தாண்டி சீட் பகிர்வு முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை காலம் சீட் பங்கீட்டில் குழப்பம் நீட்டித்த நிலையில், அந்த நிலை மாறி பல அதிரடி முடிவுகளை காங்கிரஸ் எடுக்கவுள்ளது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications