காங். போட்டுள்ள சூப்பர் பிளான்.. அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு குழு.. திட்டம் "கை" கொடுக்குமா?
டெல்லி: 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கு காங். கட்சி தனது மூத்த தலைவர்களை அனுப்பி உள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா என நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதில் உபி தவிர மற்ற 4 மாநிலங்களில் காங். முக்கிய கட்சியாக உள்ளது.
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காமல் போகும்பட்சத்தில் விரைவாகக் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க ஏதுவாக காங்கிரஸ் கட்சி உபி. தவிர மற்ற 4 மாநிலங்களில் முக்கிய தலைவர்களைக் களமிறக்கி உள்ளது.

கோவா
கோவா மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் காங். கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. இறுதி முடிவு வரும் வரை காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நட்சத்திர ரிசார்டில் தங்க வைத்துள்ளது. அதேபோல பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற முடியாதபட்சத்தில் கூட்டணி ஆட்சி ஏதுவாக ஒத்த எண்ணம் கொண்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்பாக காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், "கோவா மாநிலத்தில் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்பதில் உறுதியாக உள்ளோம். இறுதி முடிவுகள் வெளியான உடன் காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத்தை உடனடியாக கூட்டுவோம். எங்கள் சட்டக் குழுக்களும் தயாராக உள்ளன" என்றார். கோவா தேர்தல் பொறுப்பாளர் பி சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே ஷிவ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கோவாவில் முகாமிட்டுள்ளனர்.

பஞ்சாப்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங். கட்சிக்குச் சாதகமாக இல்லை என்ற போதிலும், தொங்கு சட்டசபை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கையை காங். ஏற்கனவே தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு முன்பு, கட்சியில் இருந்து வெளியேறிப் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் காங். தலைமை தொடர்பில் உள்ளது. " பஞ்சாபில் தொடங்கு சட்டசபை உடன் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என நம்புகிறோம். மற்ற கட்சிகளைச் சேர்ந்த சிலர் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர். காங்.-க்கு பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் அவர்கள் மீண்டும் காங்கிரஸுக்கு மாறத் தயாராக உள்ளனர்" என்றார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன், பவன் கேரா பஞ்சாபிற்கு விரைந்துள்ளனர்.

உத்தரகண்ட்
தேர்தலுக்குப் பின்னர் விரைவாக முடிவுகளை எடுக்க ஏதுவாகக் காங்கிரஸ் தலைவர்கள் டேராடூனைச் சென்று அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா இதைக் கண்காணிக்க உள்ளனர். அதேபோல உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பிரசாரக் குழு பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத் டேராடூனில் இருக்கிறார். அவர், காங்கிரஸ் பார்வையாளர் குழுவுடன் இணைந்து, நிலைமையைக் கண்காணித்து, தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளார். தேவைப்பட்டால் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடும் வகையில் காங்கிரஸ் தனது சட்டக் குழுவையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

மணிப்பூர்
மணிப்பூரில் ஏற்கனவே ஒத்த கருத்து கொண்ட எதிர்க்கட்சிகளைக் காங்கிரஸ் அணுகத் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் பொறுப்பாளர் மணிப்பூர் பகத் சரண் தாஸ் கூறுகையில், "எதிர்க்கட்சிகளை மனச்சோர்வு அடைய செய்து சிதறடிக்க வேண்டும் என்பதற்காகத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மணிப்பூரில் நிச்சியம் ஆட்சி மாற்றம் ஏற்படும், காங்கிரஸ் 20-22 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி 10 இடங்களிலும் வெல்லும் என எதிர்பார்க்கிறோம். பாஜகவுக்கு எதிரான ஆட்சியை அமைக்க ஏதுவாக ஒத்த கருத்து கொண்ட எதிர்க்கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார். சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டிஎஸ் சிங் தியோ, முகுல் வாஸ்னிக் மற்றும் மக்களவை எம்பி வின்சென்ட் பாலா மணிப்பூருக்கு விரைந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமை
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் முக்கிய தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார், குறைந்தது 2 மாநிலங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவாக ஆலோசித்து முடிவெடுக்க ஏதுவாக காங்கிரஸ் தலைமை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி அலுவலகத்தில் அடுத்த 28 மணி நேரத்திற்குப் பல பரபரப்பான கட்சிகள் அரங்கேற உள்ளன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications