Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

22 ஆண்டுக்கு பின்.. நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. டெல்லி செல்ல மறுத்த ராகுல்.. ஓட்டளிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யவதற்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடைபெற உள்ள நிலையில் ஓட்டளிக்க டெல்லி செல்ல ராகுல் காந்தி மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் ராகுல் காந்தி டெல்லி செல்ல மறுத்ததன் பின்னணியில் உள்ள காரணம் வெளியாகி உள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயப்பட்டு வருகிறார்.

இருப்பினும் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கவில்லை.

நாளை தேர்தல்

நாளை தேர்தல்

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தனர். மேலும் மூத்த தலைவர்கள் 23 பேர் அதிருப்தி அணியாக மாறி ஜி23 குழுவாக செயல்பட்டனர். ஒவ்வொரு மாநில தேர்தலின்போதும் கூட காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என அவர்கள் கூறி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தான் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கார்கே VS சசிதரூர்

கார்கே VS சசிதரூர்

இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. சோனியா காந்தியின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுத்ததோடு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான ரேஸில் இருந்த பின்வாங்கினார். இதையடுத்து சோனியா காந்தி ஆதரவுடன் மாநிலங்களவை எம்பியான மல்லிகார்ஜூன கார்கே களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இவர்கள் 2 பேரும் இந்தியா முழுவதும் சென்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களிடம் ஆதரவு கோரியுள்ளனர்.

டெல்லி செல்ல மறுத்த ராகுல்

டெல்லி செல்ல மறுத்த ராகுல்

இந்நிலையில் தான் நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் ராகுல் காந்தி டெல்லி செல்ல மறுத்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறும் நிலையில் தான் அவர் டெல்லி செல்ல மறுத்துள்ளார். மாறாக அவர் நாளை கர்நாடகாவிலேயே ஓட்டளிக்க உள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை சென்று வரும் ராகுல் காந்தி நாளை அங்கு அமைக்கப்பட்டுள்ள பூத்தில் ஓட்டளிக்க உள்ளார். இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 உறுதி செய்த ஜெய்ராம் ரமேஷ்

உறுதி செய்த ஜெய்ராம் ரமேஷ்

இதனை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நாளை ராகுல் காந்தி எங்கு வாக்களிப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதில் யூகங்கள் எதுவும் வேண்டாம். ராகுல் காந்தி பல்லாரி மாவட்டம் சங்கனக்கல்லுவில் உள்ள பாரத் ஜோடோ யாத்திரை முகாமில் வாக்களிக்க உள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளான 40 பேர் ஓட்டளிக்க உள்ளனர்'' என்றார்.

யாரெல்லாம் ஓட்டளிக்கலாம்?

யாரெல்லாம் ஓட்டளிக்கலாம்?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிடும் நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள், மாநில முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வாக்களித்து புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நாளைய தேர்தலுக்காக வாக்கு சீட்டுகள் உரிய பாதுகாப்புடன் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் வரும் 19ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+