”இந்தியா” கூட்டணி ஆட்சியில் மாதந்தோறும் 10 கிலோ இலவச ரேஷன், பெண்களுக்கு ரூ.8,500..ராகுல் வாக்குறுதி
டெல்லி: "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக ரேஷனில் வழங்குவோம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், இந்தியா கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும்; இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் என்னவெல்லாம் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என பட்டியலிட்டு வருகிறார் ராகுல் காந்தி. சமூக வலைதளங்களிலும் இதனை பகிர்ந்து வருகிறார் ராகுல் காந்தி.

இது தொடர்பாக ராகுல் காந்தி தெரிவிக்கையில், உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் ஒரு வாக்கு நாடு முழுவதும் நடக்கும் பயங்கரமான பாகுபாடு மற்றும் அநீதியை ஒழிக்கும். 30 லட்சம் அரசுப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தொடங்க வைக்கும்.
உங்கள் ஒரு வாக்கு ஜூலை 1 முதல் ரூ 8,500/மாதம் ஏழைப் பெண்களின் கணக்குகளுக்கு உடனடியாக மாற்ற உதவும். உங்கள் ஒரு வாக்கு இளைஞர்களுக்கு அவர்களின் முதல் வேலையான ரூ. 1 லட்சம்/ஆண்டுக்கு வழங்கும்.
உங்கள் ஒரு வாக்கு உரிமைகளை வழங்கும். உங்களது ஒரு வாக்கு அரசியலமைப்பை பாதுகாக்கும். உங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாக்கும். ஜனநாயகத்தைக் காப்பாற்றும். உங்கள் ஒரு வாக்கு தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள், பங்கேற்பு மற்றும் இடஒதுக்கீட்டுக்கு வழி வகுக்கும்.
உங்கள் ஒரு வாக்கு பழங்குடியினரின் நீர், காடு மற்றும் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டும். இந்தியாவுக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையு ம், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும் என தெரிவித்திருந்தார்.
தற்போது புதிய வாக்குறுதிகளையும் ராகுல் காந்தி வழங்கி இருக்கிறார். இது குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது: நாட்டின் ஏழைக் குடும்பங்களுக்காக காங்கிரஸ் மற்றொரு பெரிய முடிவை எடுத்துள்ளது. எங்கள் அரசாங்கம் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அல்ல, 10 கிலோ ரேஷன் இலவசமாக தரும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் மூலம் உணவு உரிமைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கியிருந்தோம். இதன் அடுத்த கட்டமாக 10 கிலோ தானியம் வழங்கப்படும்.
10 கிலோ ரேஷன் மற்றும் மாதம் 8500 ரூபாய், கல்வி மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு தொகை ஆகியவற்றால் லட்ச்கணக்கான கணக்கான குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.
நரேந்திர மோடி 20-25 கோடீஸ்வரர்களை உருவாக்கி 'அதானி' அரசை நடத்தினார், கோடிக்கணக்கான லட்சபதிகளை உருவாக்கி 'இந்தியர்களின்' அரசை நாங்கள் நடத்துவோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications