டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய கொறடா, துணை தலைவர் பதவிகள் அறிவிப்பு.. 10 எம்பிக்களுக்கு நாடாளுமன்ற பொறுப்பு.. காங். அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் எம்பிக்கள் பத்து பேருக்கு லோக்சபாவில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று கடந்த திங்கள் கிழமை காரிய கமிட்டியில் முடிவு செய்யப்பட்டது. அதோடு இன்னும் 6 மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு தேர்வு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Congress selects new Whip and Dy. leader for both house ahead of Parliament Monsoon Session

இந்த நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் செயல்படும் வகையில் புதிய பொறுப்புகள் காங்கிரஸ் எம்பிக் களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பிக்கள் பத்து பேருக்கு லோக்சபாவில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரசின் 10 மூத்த எம்பிக்கள் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்புகள்:

  • எம்.பி ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • எம்பி கே. சுரேஷ் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைமை கொறடாவாக நீடிப்பார்.
  • எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்திரி காங். லோக்சபா தலைவராக நீடிப்பார்
  • ராஜ்யசபா தலைவராக எம்பி குலாம் நபி அசாத் நீடிப்பார்
  • எம்பிக்கள் அஹமது பட்டேல், கே. சி வேணுகோபால் ராஜ்யசபா தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • எம்பிக்கள் ரவநீத் பிட்டு, மாணிக்கம் தாக்கூர் லோக்சபா கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • ஆனந்த் சர்மா காங்கிரஸ் ராஜ்யசபா துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • லோக்சபா காங்கிரஸ் துணை தலைவராக கவுரவ் கோகாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 18 நாட்கள் இந்த கூட்டம் நடக்கும் என்கிறார்கள். இதற்காக காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress selects new Whip and Dy. leader for both house ahead of Parliament Monsoon Session
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X